Connect with us

Cinema News

வீலிங் செஞ்சதால அவன் விழல… தெரியாம பேசாதீங்க… தலையில் பெரிய அடி!… டிடிஎஃப் வாசனின் நண்பர் சொன்ன ஷாக்!

TTF Vasan: பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் விபத்து குறித்து தான் தற்போது சமூக வலைத்தளமே அல்லோலப்பட்டு கொண்டு இருக்கிறது. ஏன் இப்படி ஆச்சு என பல யூகங்கள் கிளம்பி வரும் நிலையில் அவர் நண்பரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல ட்ராவல் ப்ளாகரான டிடிஎஃப் வாசனுக்கு மில்லியன் கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். ஒரு ரசிகர் மீட்டில் லட்சக்கணக்கானோர் கூட அட யாருப்பா இந்த பையன் என பலரை திரும்பி பார்க்க வைத்தார். இதை தொடர்ந்தே டிடிஎஃப் வாசன் வைரல் ஸ்டாராகினார்.

இதையும் வாசிங்க:வளரவளர வெட்டி விட்ட கதையா இருக்கே!.. வைரமுத்துவால் வாழ்க்கையை தொலைத்த கங்கை அமரன்

பைக்கில் சாகசம் செய்வது, அதீ வேகத்தில் பைக் ஓட்டுவது என பார்ப்போருக்கு ஷாக் கொடுக்கும் டிடிஎஃப் வாசன் கோவையை சேர்ந்தவர். தற்போது கோலிவுட்டில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ச்சியாக ட்ரெண்ட்டில் இருக்கும் வாசன் நேற்று சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றார்.

அப்போது பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் வீலிங் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி விழுந்து பைக் மூணு பல்ட்டி அடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வாசனுக்கு கைமுறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு யூகங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிங்க:மூச்சு விடாமல் இருக்கும் தமிழ்நாடு… விஜய் மீது பாசத்தை பொழியும் வெளிநாடுகள்.. என்ன நடக்குகிறது?

இந்நிலையில் வாசனின் நண்பரான அஜீஸ் கூறுகையில், அவன் விலீங் எப்படி செய்வான் என ரசிகர்களுக்கு தெரியும். வாசன் பைக்கில் விலீங் செய்யவில்லை. அவனுக்கு திடீரென மயக்கம் வந்ததாக கூறினான். நான் உடனே வண்டியை ஓரமாக நிப்பாட்டுமாறு கூறினேன். திடீரென இப்படி நடந்து விட்டது.

ஹெல்மெட் போட்டு இருந்தாலும் அவனுக்கு தலையில் நல்ல அடிப்பட்டு இருக்கிறது. சிடி ஸ்கேன் எடுத்தோம். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஸ்கேன் எடுக்கும் போது அவன் பட்ட கஷ்டம் அதிகம். தற்போது கொஞ்சம் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top