மூச்சு விடாமல் இருக்கும் தமிழ்நாடு… விஜய் மீது பாசத்தை பொழியும் வெளிநாடுகள்.. என்ன நடக்குகிறது?

Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் லியோ குறித்து பெரிய விளம்பரமே இல்லாமல் மூச்சுவிடாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

விக்ரம் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கி வரும் படம் லியோ. இப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். கிட்டத்தட்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகி வரும் இப்படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: விட்டா கீழ கழண்டு விழுந்திடும் போல!.. பாதி மூடி பாடாப்படுத்தும் ஐஸ்வர்யா லட்சுமி..

இப்படத்தின் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸாக இருக்கிறது. இப்பாடல் விஜய்-த்ரிஷாவிற்கு இடையேயான காதல் பாடலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் 30ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரியில் நடந்த குளறுபடிகள் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கவும் படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஜெய்லர் படத்தின் வெற்றியை தட்டி தூக்கிவே படக்குழு பல வேலைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படத்திற்கு அமெரிக்கா, லண்டன், பரீஸ் நகரங்களில் நிறைய ப்ரோமோஷன்கள் செய்யப்பட்டு வருகிறது. சென்சார் செய்யாமல் அன்கட் வெர்சனில் படம் வெளியாக இருக்கிறது. மேலும் ரிலீஸாக இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில் இப்போதே டிக்கெட் ஹவுஸ்புல்லாகி விட்டது.

இதையும் படிங்க: இனிமே என் ஸ்டைலே வேற… சம்பளம் வாங்காமல் பாலசந்தருக்காக ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!

அண்டை மாநிலமான கேரளாவில் பெண்களுக்கென தனி ஷோக்களும் போடப்பட்டு இருக்கிறது. முதல் நாள் ஷோவிற்கான டிக்கெட்களும் இப்போதே அடிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் சத்தமே இல்லாமல் லியோ ப்ரோமோஷன் செய்யப்படாமல் இருக்கிறது. ஏன் இந்த அமைதி எனப் பலரும் தற்போது கிசுகிசுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story