இனிமே என் ஸ்டைலே வேற… சம்பளம் வாங்காமல் பாலசந்தருக்காக ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!
Rajinikanth: தன்னுடைய குருநாதர் தனக்காக செய்த நன்றிக்காக அவருக்கும் ஒரு விஷயத்தில் இறங்கி செய்து அவர் கவலையை மொத்தமாக தீர்த்து இருக்கிறார் ரஜினிகாந்த். இது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
ராகவேந்திரர் மீது இருந்த பக்திபற்றால் அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்துக்கு ஒரு ஆசை வந்தது. ஆனால் அவர் கேட்ட எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களால் முடியவே முடியாது என பின்வாங்கினர்.
இதையும் படிங்க:நயன்தாராவே ஒண்ணும் கொடுக்கல!.. கல்யாணம் ஆன பின்னரும் ஷாருக்கான் கிட்ட ஃபீலிங்கை கன்ட்ரோல் பண்ண முடியல போல!..
ஆனால் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த பாலசந்தர் உனக்கு என்ன வேணும் எனக் கேட்கிறார். ராகவேந்திரராக நடிக்க வேண்டும் என்ற ஆசையை கூறுகிறார். அவரும் உடனே ஓகே சொல்லி விடுகிறார். இப்படத்தினை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
இப்படம் கண்டிப்பாக ப்ளாப் தான் ஆகும் என பலரும் கமெண்ட் அடித்தனர். அதேபோல, படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஆனால் எம்.ஜி.ஆர் அரசு அந்த நேரத்தில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு கொடுத்தன்பேரில் கொஞ்சம் தப்பிக்க முடிந்தது.
இதையும் படிங்க:கூட இருந்தே குழி பறிக்கும் புஸ்ஸீ ஆனந்த்! மிஷ்கின் விவகாரத்தில் பொம்மையாக மாறிய விஜய்
தனக்காக செய்த பாலசந்தருக்காக சம்பளமே வாங்காமல் ரஜினிகாந்த் நடித்து கொடுத்த படம் தான் வேலைக்காரன். தன்னுடைய ஸ்டைலில் இருந்து மாறி முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டது. ‘நமக் ஹலால்’ என்ற ஹிந்தி பாடத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு திரைக்கதையை பாலச்சந்தர் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.
இளையராஜா இசையில் இப்படத்தின் எல்லா பாடல்களுமே சூப்பர்ஹிட்டாக அமைந்தது. இதனால் படமும் மாஸ் வசூலை படைத்தது. பாலசந்தர் தயாரித்த இந்த படம் தான் அவர் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய வசூலை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms