கூட இருந்தே குழி பறிக்கும் புஸ்ஸீ ஆனந்த்! மிஷ்கின் விவகாரத்தில் பொம்மையாக மாறிய விஜய்

by Rohini |   ( Updated:2023-09-18 02:38:47  )
mysskin
X

mysskin

Actor Vijay and Mysskin: விஜயின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. லியோ படம் அறிவித்ததிலிருந்து இன்று வரை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லியோ படம் விஜயின் கெரியரில் ஒரு பெரும் சாதனையை பெறும் படமாகவும் வசூலில் இதுவரை இல்லாத அளவு அதிக லாபத்தை தரும் படமாகவும் இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் வகையில் முதல் ஆளாக களத்தில் இறங்கியவர் இயக்குனர் மிஷ்கின். லியோ படத்தின் முதல் அப்டேட்டை மிஷ்கின் தான் கொடுத்துவந்தார். அதன்பின்னர் லோகேஷ் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வாயை மூடிக் கொண்டார். பொதுவாக மிஷ்கினை பற்றி நன்கு தெரிந்தவர்கள் அவர் எப்படி பட்டவர்? எந்த மாதிரி பேசக்கூடியவர் என தெரிந்திருக்கும்.

இதையும் படிங்க: ரகுவரனை வில்லனாதான் பார்த்திருப்பீங்க! இளையராஜாவையே மிஞ்சிய ரகுவரனை பற்றி தெரியுமா?

அதே வகையில் பாசத்தை போதும் என்று சொல்லுமளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பவர். ஆனால் தனக்கு யாராவது துரோகம் செய்துவிட்டால் எந்தளவுக்கு பாசத்தை கொடுத்தாரோ அதற்கு பல மடங்கு கோபத்தை வெளிக்காட்டுவார். உதாரணமாக விஷால் விஷயத்தை நினைவுக் கூறலாம்.

இந்த நிலையில் வழக்கம் போல மிஷ்கினிடம் லியோ படத்தை பார்த்து விட்டீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மிஷ்கின் ‘என் தம்பி பார்த்துவிட்டான். அவன் நல்லா இருக்குனு சொன்னான்.’ என்று விஜயை பற்றி ஒருமையில் அதுவும் மிகவும் உரிமையுடன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஜோடியின் திருமண ரிசப்ஷன்!.. கெத்தா என்ட்ரி கொடுத்த இளம் நடிகர்.. வைரல் வீடியொ!..

இதனால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் வாசகங்களையும் அச்சடித்து ஒட்டியிருக்கின்றனர்.இது எப்பேற்பட்ட ஒரு கீழ்த்தனமான செயல் என ஒரு சினிமா பத்திரிக்கையாளர் ஆவேசமாக பேசியிருக்கிறார். மேலும் இது சம்பந்தமான செய்தி கண்டிப்பாக விஜய் காதுக்கு போயிருக்க வேண்டும். ஆனால் தெரிந்தும் விஜய் சும்மா இருக்கிறார் என்றால் அரசியலுக்கு இது சரிவருமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும் இந்தமாதிரி தன்னைச் சுற்றியே இருக்கும் பிரச்சினையை பார்த்தும் கண்டுகொள்ளாத விஜய் எப்படி நாட்டில் நடக்கும் பிரச்சினையை தட்டிக் கேட்பார் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மேலும் விஜய்க்கு பின்னாடி சாவி கொடுத்து இயங்க வைக்கும் புஸ்ஸீ ஆனந்த்தான் ஒரு கட்டத்தில் குழிபறிக்கவும் காத்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: லால் சலாம் டப்பிங்கை தாறுமாறா முடித்த ரஜினிகாந்த்!.. அதில் அவர் சொல்ற வசனத்தை கேட்டீங்களா?..

மிஷ்கின் எந்தவிதத்திலயும் விஜயை திட்டவில்லை. உரிமையுடன்தான் கூறியிருக்கிறார். ரசிகர்கள் இந்தளவுக்கு சென்றதற்கு புஸ்ஸீ ஆனந்த்தான் காரணம் என அதற்கான விளக்கத்தையும் கூறினார். அதாவது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடந்த கூட்டத்தில் பேசிய புஸ்ஸீ ஆனந்த் ‘இனிமேல் விஜயை விஜய் என்று அழைக்கக் கூடாது என்றும் தளபதி என்றே அழைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இதை பற்றி பேசிய அந்த பத்திரிக்கையாளர் ‘ஏன் விஜய் பெயர் விஜய்தானே? விஜய் என்று கூப்பிட்டால் என்ன தவறு? ஏற்கனவே சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை இன்னும் அடங்கியபாடில்லை. இதில் தளபதி என்று மற்றுமொரு சர்ச்சையை புஸ்ஸீ ஆனந்த் ஏற்படுத்தியிருக்கிறார். அரசியலில் ஏற்கனவே ஒரு தளபதி இருக்கும் பட்சத்தில் விஜயை அவ்வாறு அழைக்க சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம்? இது விஜய்க்கு குழிபறிக்கும் செயலாகவே புஸ்ஸீ ஆனந்த் செய்துவருகிறார்’என்று கூறினார்.

Next Story