ரகுவரனை வில்லனாதான் பார்த்திருப்பீங்க! இளையராஜாவையே மிஞ்சிய ரகுவரனை பற்றி தெரியுமா?

Actor Raghuvaran: தமிழ் சினிமா எத்தனையோ வில்லன் நடிகர்களை சந்தித்து வந்திருக்கின்றது. ஆனால் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்த நடிகராக 90களில் வலம் வந்தார் நடிகர் ரகுவரன். கிட்டத்தட்ட அவர் மறைந்து 15 வருடங்களை கடந்தும் இன்றுவரை ரகுவரனை பற்றி நாம் பேசிவருகிறோம்.

இதற்கு முக்கிய காரணம் நடிப்பில் அவர் காட்டிய தீவிரமும் நடிப்பிற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்ததுமே ஆகும் . வில்லனாக குணச்சித்திர நடிகராக , ஹீரோவாக என அனைத்து கதாபாத்திரங்களிலும் தன்னை முன்னிலை படுத்தியிருக்கிறார் ரகுவரன்.

இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஜோடியின் திருமண ரிசப்ஷன்!.. கெத்தா என்ட்ரி கொடுத்த இளம் நடிகர்.. வைரல் வீடியொ!..

ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நடிகராகவும் ரகுவரன் இருந்திருக்கிறார். ஆனால் கமலுடன் ஒரு படத்தில் கூட ரகுவரன் நடித்ததே இல்லை. அதை பற்றி எத்தனையோ வதந்திகள் வந்தாலும் ஒரு பேட்டியில் கமலே இதற்கான காரணத்தை கூறினார்.

அதாவது அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவதாக இருந்ததாம். ஆனால் அதற்குள் காலம் அவரை கொண்டு சென்று விட்டது என ஒரு பேட்டியில் கமல் கூறினாராம். ஆனால் இருவருக்குள்ளும் எந்தவித கருத்து வேறுபாடும் இருந்ததில்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிங்க: லால் சலாம் டப்பிங்கை தாறுமாறா முடித்த ரஜினிகாந்த்!.. அதில் அவர் சொல்ற வசனத்தை கேட்டீங்களா?..

அதே போல் ரகுவரன் கடைசியாக நடித்தது யாரடி நீ மோகினி திரைப்படம். இந்தப் படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருப்பார் ரகுவரன். இப்படி பல படங்களில் நடித்து மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த ரகுவரனை பற்றி ஒரு சில தெரியாத தகவல்களும் இருக்கின்றன.

அதாவது அவர் ஓவியம் வரைவதில் வல்லவராம். அதுமட்டுமில்லாமல் இசையிலும் பேரார்வம் உடையவராக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 23 இசைக்கருவிகளை இசைக்கும் வல்லமை படைத்தவராக இருந்திருக்கிறார் ரகுவரன். அந்தளவுக்கு இசையில் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டவராக இருந்தாராம் ரகுவரன்.

இதையும் படிங்க: இருந்தாலும் இவ்ளோ நல்லவரா இருக்காரே ஷாருக்கான்!.. ஜவான் இன்னும் அந்த மைல் கல்லை தொடலையாம்!..

கிட்டத்தட்ட ஒரு பன்முக கலைஞராக இருந்திருக்கிறார். ஒரு வேளை உயிருடன் நல்ல நலமுடன் இருந்திருந்தால் இன்னும் வெவ்வேறு பரிணாமங்களில் ரகுவரனை பார்த்திருக்க முடியும்.

 

Related Articles

Next Story