வலிமை ரிலீஸில் விருப்பமில்லாத அஜித்.! வெளியான திடுக்கிடும் தகவல்.!

அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை இத் திரைப்படத்தை H வினோத் இயக்கியுள்ளார், போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின், ரிலீஸ் முதலில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், கட்டுப்பாடுகள் அதிகரித்த காரணத்தால் தேதி மாற்றப்பட்டு தற்போது பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட நிறுவனம் அறிவிக்கும் முன்பே தியேட்டர் நிறுவனங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 24 பட ரிலீஸ் என […]

By :  Manikandan
Update: 2022-02-02 04:56 GMT

அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை இத் திரைப்படத்தை H வினோத் இயக்கியுள்ளார், போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின், ரிலீஸ் முதலில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், கட்டுப்பாடுகள் அதிகரித்த காரணத்தால் தேதி மாற்றப்பட்டு தற்போது பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட நிறுவனம் அறிவிக்கும் முன்பே தியேட்டர் நிறுவனங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 24 பட ரிலீஸ் என அறிவித்து விட்டனர்.

இதையும் படியுங்களேன்- அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகரா வருடாவருடம் என்ன செய்கிறார் பாருங்கள்.!

தமிழக அரசு தற்போது வரை 50 சதவீதம் பேர்களுக்கு மட்டுமே திரையரங்குகள் அனுமதித்துள்ளது. அதனால், தமிழக அரசு மீண்டும் 100 சதவீத இருக்கை அறிவித்த பின்பு நாம் ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என அஜித் கூறியிருந்தாராம்.

ஏனென்றால், நாம் ரிலீஸ் தேதி அறிவித்த பின்னர் அரசு 100% இருக்கைக்கு அனுமதி அளித்தால் ஏதேனும் பிரச்சனை வரும் நமது படத்திற்காக அரசு இப்படி செய்துள்ளது என சில பேச்சுகளிலும் வரும். எனவே, அதனை தவிர்க்க தமிழக அரசு ஏதேனும் ஒரு கட்டுப்பாடு தளர்த்திய பின்னர் நாம் அறிவிக்கலாம் என அஜித் கூறியிருந்தாராம்.

ஆனால், அதற்கு முன்னரே படக்குழு ரிலீஸ் தேதியை இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது இந்த செய்தி அஜித்திற்கு தற்போது தெரிய வந்திருக்கும் என்பதுகூட தெரியவில்லை.

Tags:    

Similar News