AK 62 திரைப்படம் தாமதம் ஆவதற்கு இவ்வளவு காரணம் இருக்கா?... என்னப்பா சொல்றீங்க?
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. விக்னேஷ் சிவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூட “ஏகே 62” என்று தனது பயோவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்குள் ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்கவில்லை எனவும், விக்னேஷ் சிவன் கூறிய கதை அவ்வளவாக அஜித்தை ஈர்க்கவில்லை எனவும் சில பேச்சுக்கள் அடிபட்டன. எனினும் விக்னேஷ் சிவன் தனது […]
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. விக்னேஷ் சிவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூட “ஏகே 62” என்று தனது பயோவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சில காரணங்களால் “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்குள் ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்கவில்லை எனவும், விக்னேஷ் சிவன் கூறிய கதை அவ்வளவாக அஜித்தை ஈர்க்கவில்லை எனவும் சில பேச்சுக்கள் அடிபட்டன. எனினும் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தின் பயோவில் இருந்து “ஏகே 62” என்ற தலைப்பை நீக்கிவிட்டார்.
இதனை தொடர்ந்து மகிழ் திருமேனி “ஏகே 62” திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தெரியவருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டது. எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
அதே போல் இத்திரைப்படத்தை மகிழ் திருமேனிதான் இயக்கவுள்ளார் என்பது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே இருந்தாலும், இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ள லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது “ஏகே 62” திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “ஏகே 62” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கும் என கூறப்படுகிறதாம். மேலும் இத்திரைப்படத்திற்கான தாமதத்திற்கு காரணம் என்னவென்றால், இத்திரைப்படம் பேன் இந்தியா படமாக வெளிவரவுள்ளதால், கிட்டத்தட்ட இந்திய மொழிகளுக்கு பொதுவாக உள்ள ஒரு பெயரை டைட்டிலாக வைக்க வேண்டும் என அஜித் விருப்பப்படுகிறாராம்.
அதே போல், அஜித்குமார் இத்திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி கொண்டு வரச்சொல்லியிருக்கிறாராம். ஆதலால் மகிழ் திருமேனி ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து ஸ்டோரி போர்டு தயார் செய்துகொண்டிருக்கிறாராம்.
இந்த காரணங்களினால்தான் “ஏகே 62” திரைப்படம் தாமதமாகிறதாம். மேலும் ஒரே கட்டத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட வேண்டும் என படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் செய்யாறு பாலு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமராஜன் நடிப்பை விட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்… இப்படி ஒரு அதிர்ச்சி தகவலா?