கல்லா நிறைஞ்சிருச்சு! மூட்டை முடிச்ச கட்டிகிட்டு ஓடிடிக்கு தயாரான ‘அரண்மனை 4’! எப்போ ரிலீஸ் தெரியுமா?

Aranmanai 4: இந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களில் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிய திரைப்படமாக அமைந்தது அரண்மனை 4. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக எந்த ஒரு பெரிய வசூலையும் பார்த்திராத தமிழ் சினிமாவுக்கு ஒரு மாபெரும் விருந்து படைத்தது இந்த அரண்மனை 4. இந்த திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம். இவருடன் இணைந்து தமன்னா, ராஷி கண்ணா போன்ற பல நடிகர்களும் நடித்து வெளியான படம். காமெடி படத்தை […]

By :  Rohini
Update: 2024-06-02 23:14 GMT

aranmanai

Aranmanai 4: இந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களில் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிய திரைப்படமாக அமைந்தது அரண்மனை 4. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக எந்த ஒரு பெரிய வசூலையும் பார்த்திராத தமிழ் சினிமாவுக்கு ஒரு மாபெரும் விருந்து படைத்தது இந்த அரண்மனை 4. இந்த திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம்.

இவருடன் இணைந்து தமன்னா, ராஷி கண்ணா போன்ற பல நடிகர்களும் நடித்து வெளியான படம். காமெடி படத்தை எடுப்பதில் மிகச்சிறந்தவரான சுந்தரி சி அரண்மனை படத்தை தொடர்ந்து பேய் படங்களை எடுப்பதிலும் நம்பர் ஒன் இயக்குனராக இருந்து வருகிறார் . 2014 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் முதல் பாகத்தை எடுத்து மாபெரும் வெற்றி பெற்றார் சுந்தர் சி.

இதையும் படிங்க: சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்ட பிரபாஸ்.. கல்கி 2898 ஏடி படத்துக்கு டோட்டலாக குறைந்த எதிர்பார்ப்பு?

அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு அதனுடைய இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வசூலில் சாதனை படைத்தது. அடுத்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதன் மூன்றாம் பாகத்தை எடுத்தார். ஆனால் முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை போல மூன்றாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் வசூலில் சாதனை படைத்தார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் இரண்டாம் தேதி வெளியான திரைப்படம் தான் அரண்மனை 4. யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை இந்த படம் ருசித்தது. 100 கோடி கிளப்பிலும் இணைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கின்றது. அரண்மனை 4 படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: என்னது இந்த ராகத்தில் பாடினால் மழை வருமா? ராஜாவை கேலி செய்த யேசுதாஸ்.. நடந்தது என்ன தெரியுமா?

அதைப்போல சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த படத்தை வரும் ஜூன் 14ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனையை படைத்த அரண்மனை 4 திரைப்படம் ஓடிடியிலும் அந்த அளவு சாதனையை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News