முன்னணி நடிகர் ஒருவரை வைத்து பாலசந்தர் எடுத்த ஒரே திரைப்படம்! ரஜினி, கமல் இல்லாமல் யார் அந்த நடிகர்?
Balachander: வாழ்வியலின் எதார்த்தத்தை படமாக காட்டுவதில் மிகவும் தலை சிறந்த இயக்குனர் கே பாலச்சந்தர். முதன் முதலில் நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலச்சந்தர் அடுத்தடுத்து மிகவும் குடும்ப பங்கான எதார்த்தமான கதைகளில் அமைந்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இயக்குனராக தன்னை நிலை நிறுத்தினார். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட பல நடிகர்கள் இன்று முன்னணி கலைஞர்களாக இந்த தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் இரு துருவங்களான ரஜினி […]
Balachander: வாழ்வியலின் எதார்த்தத்தை படமாக காட்டுவதில் மிகவும் தலை சிறந்த இயக்குனர் கே பாலச்சந்தர். முதன் முதலில் நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலச்சந்தர் அடுத்தடுத்து மிகவும் குடும்ப பங்கான எதார்த்தமான கதைகளில் அமைந்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இயக்குனராக தன்னை நிலை நிறுத்தினார்.
இவரால் அறிமுகம் செய்யப்பட்ட பல நடிகர்கள் இன்று முன்னணி கலைஞர்களாக இந்த தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் இரு துருவங்களான ரஜினி கமல் பாலச்சந்தர் அறிமுகத்தின் வாயிலாக கிடைத்த பொக்கிஷங்கள். இன்றைய இயக்குனர்கள் மாதிரி முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்தால் மட்டுமே நம் மார்க்கெட்டு ஓரளவு உயரும் என்ற இல்லாமல் பாலச்சந்தர் தன் கதைகளின் மூலம் தன்னை மக்களிடம் இணைத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பிரேமலு பிரபலத்தை வளைத்து போட்ட குட் பேட் அக்லி டீம்… கூடவே இன்னொரு வில்லன் நடிகரும் வராராம்!…
பாலச்சந்தர் படம் என்றாலே ஒரு தனித்துவம் இருக்கும். அவருடைய பாணியே வேறு. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் முன்னணி நடிகர்களை வைத்து பாலச்சந்தர் வேறு ஏதேனும் படம் எடுத்திருக்கிறாரா என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் முன்னணி நடிகரை வைத்து பாலச்சந்தர் எடுத்த ஒரே திரைப்படம் எதிரொலி.
அதில் சிவாஜியை கதாநாயகனாக போட்டு படம் எடுத்தார் பாலச்சந்தர். அதன் பிறகு ரஜினி கமலை வைத்து பல படங்கள் அவர் எடுத்தாலுமே அந்த இரு நடிகர்களும் பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர்களே தவிர முன்னணி நடிகர்களின் பட்டியலில் ரஜினியும் கமலும் வரமாட்டார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு ரஜினி கமலை வைத்து படம் எடுப்பதையே நிறுத்திக் கொண்டார் பாலச்சந்தர்.
இதையும் படிங்க: எப்பா சூரி நீயா இப்படி நடிச்சிருக்கே? படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை..! பயில்வான் விமர்சனம்
அதற்கு காரணம் ரஜினி கமலின் இமேஜ் வேறு மாதிரி போய்க்கொண்டிருந்தது. பாலச்சந்தரின் படங்களின் இமேஜ் வேற மாதிரி இருந்ததனால் தான் அவர்கள் இருவரையும் வைத்து படம் எடுப்பதை தவிர்த்து விட்டார் பாலச்சந்தர் என சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதிலிருந்து பார்க்கும் பொழுது கதையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து படம் எடுத்து இருக்கிறார் பாலச்சந்தர். மற்றபடி முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் இல்லாமல் நல்ல நல்ல கதை களத்தோடு இந்த தமிழ் சினிமாவிற்கு ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் பாலச்சந்தர்.
இதையும் படிங்க: கஜினி மாதிரி படையெடுத்த இயக்குனர்கள்! அசால்ட்டா தட்டி தூக்கிய லோகி.. கூலி படத்தில் சத்யராஜ் நடிக்க காரணம்