மீண்டும் ரெண்டு... இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் எலிமினேஷனில் எக்கச்சக்க டிவிஸ்ட் இருக்குப்பா!...
பிக்பாஸ் எலிமினேஷன்கள்
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இந்த வாரமும் இரண்டு எலிமினேஷன்கள் நடந்திருக்கும் நிலையில், அந்த போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசனில் இந்த வாரம் இறுதிப்போட்டியின் முதல் பைனலிஸ்ட்டை தேர்வு செய்யும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் எல்லா போட்டியாளர்களும் கடுமையாக போராடி ஒவ்வொருவரும் அதிகம் செலுத்தி வந்தனர்.
கடைசி போட்டி வரை யார் வெற்றியாளர் என்ற குழப்பமே நீடித்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் கடைசி போட்டியில் தன்னுடைய பெஸ்ட் கொடுத்து ரயான் டிக்கெட்டை வென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனாலும் அது குறித்து இன்று தான் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எபிசோடில் கூறப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயான் கடைசி போட்டியில் விதிமீறல் செய்ததையும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதனால் அதற்கும் விஜய் சேதுபதி எதுவும் பதில் சொல்வாரா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களில் கடந்து இந்த வாரமும் இரண்டு எலிமினேஷன்கள் நடத்தப்பட இருக்கிறது. இதில் பெண்கள் அணியிலிருந்து மஞ்சரியும், ஆண்கள் அணியும் இருந்து ரானவும் வெளியேறி இருக்கின்றனர்.
இன்னும் இறுதிப் போட்டிக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருப்பதால்தான் இந்த தொடர் இரண்டு எலிமினேஷன்கள் நடந்து வருகிறதாம். வரும் வாரத்தில் பணப்பெட்டியும் வைக்கப்பட்டு மிட் வீக் எவிக்ஷனும் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டிக்கெட்டை வென்ற ரயான் பெட்டியை எடுக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. மேலும் வெற்றிக் கோப்பையை முத்துக்குமரன் நெருங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்குரிய பதில்கள் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.