வீட்டிற்குள் வந்த எலிமினேடட் போட்டியாளர்கள்… வெடித்த பிரச்னை… என்னங்க இப்படி ஓபனா வன்மத்தை கக்குறீங்க..
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள்
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி வாரத்தை நெருங்கி வருகிறது. அதன் பொருட்டு எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.
எலிமினேட் போட்டியாளர்கள்: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்துக்கு முந்தைய வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிற்குள் வருவது வழக்கம். அப்படி அவர்கள் வரும்போது யாராவது ஒரு போட்டியாளர்கள் மட்டுமே தங்களுடைய பிரச்சினையை உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் கேட்டு சண்டையாக மாற்றுவார்கள்.
ஆனால் இந்த முறை உள்ளே வந்திருக்கும் எல்லா போட்டியாளர்களும் இறுதி வாரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போட்டியாளர்களை வன்மத்துடன் கையாளுவது போல இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. அந்த வகையில் உள்ளே வந்திருக்கும் எல்லா போட்டியாளர்களும் பைனலிஸ்ட்டை கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் அநாகரீகமாக பேசி வருகின்றனர்.
பிக்பாஸ் புரோமோ: காலையில் தொடங்கிய முதல் புரோமோவில் உள்ளே வந்த சுனிதா ஜாக்குலின் முதற்கொண்டு எல்லோரையும் வசை பாடத் தொடங்கினார். விஷாலை ட்ரையாங்கிள் லவ் செய்கிறாயா என்றும் ஜாக்லினை ஓட்டு கிடைக்கும் போட்டியாளர்களுடன் ஒட்டிக் கொள்கிறாய் என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இரண்டாவது புரோமோவில் உள்ளே வந்த அர்னவ். தரம் தாழ்ந்து விமர்சிக்க தொடங்கினார். இதில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் கருத்து சொல்லலாம் அதற்கு வார்த்தைகள் பயன்பாடு ரொம்பவே முக்கியம் எனவும் அவரை அமைதிப்படுத்த முயன்றனர். அர்னவ் வெளியேறிய போது பாய்ஸ் டீமை ஜால்ராக்கள் என பேச முற்பட்டபோது விஜய் சேதுபதியே அவரை அடக்கியதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து உள்ளே வந்த சிவகுமார் மட்டுமே ஓரளவு ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து அதற்கேற்ப போட்டியாளர்களை விமர்சித்திருக்கிறார். மேலும் இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடக்க இருப்பதாகவும் அதை உள்ளே வந்திருக்கும் போட்டியாளர்கள் தான் நடத்த இருப்பதாகவும் வர்ஷினி தெரிவித்திருக்கிறார்.
இதில் கண்டிப்பாக ஒரு வலுவான போட்டியாளர் வெளியேற வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் கடைசியாக உள்ளே வந்த தர்ஷா குப்தா தன்னை வெளியேற்றிய போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கவே வந்ததாக ஆரம்பித்தார். அதிலும் முத்துகுமரனை வேஸ்ட்டுனு சொன்னாலும் ஏன் அந்த ரியாக்ஷன் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அருண் எப்போ உண்மையான முகத்தை காட்டுவீங்க என்றும் கேட்டு இருக்கிறார். இதில் உள்ளே வந்திருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் பைனலை நெருங்கி இருக்கும் போட்டியாளர்களுக்கு எதிராக தான் பேசி வருகின்றனர். தயாரிப்பாளர் ரவீந்தர் மட்டுமே தீபக்கிற்கு பாசிட்டிவான கருத்துக்களை சொல்லி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.