Biggboss Tamil: என்னால தான் எல்லா போச்சு… கதறி அழுக்கும் முத்துகுமரன்…
பிக்பாஸ் புரோமோ அப்டேட்கள்
Biggboss Tamil: முத்துகுமரன் செய்த தப்பால் பிக்பாஸ் வீட்டில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக அவர் கதறி அழுகும் புரோமோக்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கன்வெயர் பெல்ட் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி இருந்தனர். முதல் நாளிலேயே ரானவுக்கு அடிப்பட்டு அவர் கையில் தசை விலகியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மூன்று வாரம் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து போட்டி நடந்த நிலையில் அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின் உள்ளிட்ட போட்டியாளர்கள் மூர்க்கத்தனமாக நடந்தனர். அதுமட்டுமல்லாமல் கடுமையான போட்டியில் மஞ்சள் அணியை சேர்ந்த ராயன், ஜாக்குலின், ரஞ்சித் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து இன்று பெஸ்ட் பெர்மானஸ் நாமினேஷன் நடந்தது. இதில் போட்டியாளர்கள் தேர்வு செய்த முத்து, பவித்ரா மற்றும் ஜெப்ரி கேப்டன் டாஸ்கில் கலந்துக்கொண்டனர். அதற்குரிய டாஸ்க் இன்று நடந்தது. இதில் பவித்ராவுக்கு முத்துகுமார் விட்டு கொடுத்து இருக்கிறார்.
இதற்கான புரோமோ காலையில் வெளியானது. கோல் போஸ்ட்டில் இன்னொரு போட்டியாளர் தடுக்க ஒருவர் கோல் போட வேண்டும். அதை கண்டுக்காமல் முத்துகுமார் விட பிக்பாஸ் கோபமாகிறார். இதனால் இந்த வார கேப்டன் டாஸ்க் ரத்து செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நாமினேஷன் ப்ரீ பாஸும் ரத்து செய்யப்பட எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்துகுமரன் தன்னால் தான் இப்படி நடந்துவிட்டதாக கூறி கதறி அழுகிறார். தொடர்ந்து மன்னித்து விடுங்கள் பிக்பாஸ் இனி இப்படியே நடக்காது என போட்டியாளர்களுடன் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: முத்து செய்த சேட்டை… இனியா குழந்தையா குட்டி சாத்தான்… ஓவரா பேசாதீங்க கோமதி!...