முடியலைனா வெளில போங்க… டாஸ்க் ஆடுறவங்க ஆடட்டும்… ஜாக்குலின் பேச்சா பேசுறீங்க!...

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடக்க இருக்கும் எபிசோட்டின் புரோமோ அப்டேட்ஸ்

By :  Akhilan
Update: 2024-12-18 07:28 GMT

பிக் பாஸ் தமிழ் 

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் இந்த வாரம் கன்வேயர் பெல்ட் டாஸ்க் நடந்து வரும் நிலையில் போட்டியாளர்களின் மோசமான மனப்பான்மை தற்போது ரசிகர்களிடம் அப்பாட்டமாக வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. பல நாட்களாக அதிருப்தியை சந்தித்து வந்த நிகழ்ச்சி சில வாரங்களாக தான் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் ஏஞ்சல் மற்றும் டீமன் டாஸ்கில் இருந்து நிகழ்ச்சியின் டிஆர்பி அதிகரித்து இருக்கிறது.

இதைத் தொடர்ந்து இந்த வாரம் கன்வேயர் பெல்ட் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த டாஸ்க் நடக்கும் போது போட்டியாளர்களிடம் மிகப்பெரிய அளவில் சண்டை வெடிக்கும். சீசன் இரண்டில் மகத் இந்த டாஸ்க் மிகக் கோபமாக நடந்து கொண்டது ரசிகர்களிடம் பிரபலம்.

அதைத்தொடர்ந்து சீசன் 6ல் அசீம் என தள்ளுமுள்ளு நடந்தது இந்த டாஸ்கில்தான். இதன் காரணமாகவே இந்த டாஸ்க் அறிவிக்கப்பட்டவுடன் ரசிகர்களிடம் எக்கச்சக்க சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த சில நிமிடங்களில் முரட்டுத்தனமாக ரானவை தள்ளினார் ஜெஃப்ரி. அதில் விழுந்த ரானவிற்கு கையில் அடிப்பட்டு 3 வாரம் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இன்றும் இந்த டாஸ்க் நடந்து வருகிறது. இதற்குரிய ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மீண்டும் சண்டைக்களமாக மாறி இருக்கிறது. ஜெஃப்ரி தவறாக ஆடிய பின்னர் அதை ராயன் மற்றும் ஜாக்குலின் கேள்வி கேட்க தொடங்கினார். இதற்கும் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் சண்டை போட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, சௌந்தர்யா திமிராக நடந்து கொள்ள பேசும் போது இது மாதிரி நடத்துக்காதே என்கிறார் முத்துக்குமரன். தொடர்ந்து ஒருவருக்கு திடீரென மருத்துவ உதவி தேவைப்பட்டால் ஆட்டத்தை சற்று நேரம் நிறுத்த வேண்டும் என கேட்கிறார் ராயன்.

ஆனால் ஜாக்குலின் ஆட முடியவில்லை என்றால் வெளியில் போய் விடுங்கள். ஆட முடிந்தவர்கள் மட்டும் விளையாடட்டும் என பேசுகிறார். இதில் கடுப்பான முத்துக்குமார் ஆடனும்னா ஆடுங்க. மருத்துவ ரூமிற்கு செல்பவர்கள் செல்லுங்கள் அந்த நேரத்தில் அவர்களுடைய சுயம் வெளியில் வரட்டும் என பேசிவிட்டு செல்கிறார்.

Tags:    

Similar News