பிக்பாஸ் டைட்டில் மட்டும்தான் போச்சு… சம்பளத்திலேயே இத்தனை லட்சமா? ரஞ்சித்தின் சம்பவம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ரஞ்சித்தின் சம்பளம்
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் கடந்த வாரம் எலிமினேட் ஆன ரஞ்சித்தின் சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழ் நடிகரான ரஞ்சித் சமீபகாலமாகவே சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வந்தார். அந்தவகையில் விஜயின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமியில் பழனிசாமியாக நடித்து வந்தார். தொடர்ந்து அவர் நடிப்பில் கவுண்டம்பாளையம் படம் வெளியானது.
இதனால் வைரல் புகழில் இருந்தவர் திடீரென பிக்பாஸுக்கு உள்ளே வந்தார். முதல் நாளிலேயே அவர் பேட்டி ஒன்றில் பேசியது குறித்து விஜய் சேதுபதி அதிருப்தியுடன் பேசி இருந்தார். இதனால் உள்ளே செல்லும் ரஞ்சித் நிறைய கன்டெண்ட் கொடுத்து மாட்டிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட அவரை காப்பாற்ற ரவீந்தர் பிரான்க் செய்திருந்தார். அதை அவரிடம் இருந்து பெரிய அளவில் காட்சிகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் அவர் மனைவி பிரியா ராமன் தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவாக பேட்டிகள் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கன்வேயர் பெல்ட் டாஸ்கில் ராயன் மற்றும் ஜாக்லின் உடன் இணைந்து வெற்றியும் பெற்றிருந்தார். அதில் நாமினேஷன் பிரீபாஸை ராயனுக்கு ஜாக்லின் வழங்க அதிருப்தியை தெரிவித்து ரஞ்சித் சண்டையிட்டது மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கொடுத்த பெரிய அளவிலான கன்டெண்ட்.
தொடர்ச்சியாக, நிகழ்ச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறி வரும்போது மனைவி பிரியா ராமன் உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்ததை வைரல் வீடியோவாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் ரஞ்சித்துக்கு ஒருநாள் சம்பளமாக 50000 வரை பேசப்பட்டிருந்தது. 77 வது நாளில் வெளியேறிய ரஞ்சித்தின் சம்பளம் 38 லட்சத்தி ஐம்பதாயிரம் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்பளம் என்பதால் பத்து சதவீதம் அளவில் டிடிஎஸ் பிடிக்கப்படும்.
அதுபோல டைட்டில் வின்னருக்கு கொடுக்கப்படும் 50 லட்சத்தில் கடந்த சீசன்களாக சில போட்டியாளர்கள் பெட்டியில் வைக்கும் பணத்தை எடுத்துச் சென்று விடுகின்றனர். இதனால் போட்டியாளர்களுக்கு முழு தொகை பரிசாக கிடைப்பதில்லை. கிடைக்கும் தொகையிலும் 30 சதவீதம் வரை வரி பிடிக்கப்படும்.
இதனால் ரஞ்சித்தின் சம்பளம் தான் தற்போது பிக் பாஸில் வெளியேறியவர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் பரிசுத்தொகையை விட இது அதிகம் என கூறப்படுகிறது. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மட்டுமே அதிக அளவு சம்பளம் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: சோசியல் மீடியாவிலும் சண்டையா? பிக்பாஸ் அர்ச்சனா மற்றும் மாயாவுக்கு என்னதான் பிரச்சினை?