இறுதி கட்டத்தை நெருங்கியது பிக்பாஸ்… முதல் டிடிஎஃப் போட்டியில் வென்றது இவரா?

பிக்பாஸ் டிக்கெட் டூ பினாலே

By :  Akhilan
Update: 2024-12-30 03:18 GMT

பிக் பாஸ் தமிழ் 8

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியான டிடிஎஃப் இந்த வாரம் நடக்க இருக்கும் நிலையில், அதுகுறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து ரசிகர்களிடம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதற்காக தயாரிப்புக் குழு பலவகைகளில் முயன்று இருக்கிறது. இருந்தும் மற்ற சீசன்களைப் போல இந்த சீசன் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

இதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் தேர்வு தான் எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அடித்து விளையாடிய விஜய் சேதுபதி கூட தொடர்ந்து அதே போன்ற யுத்தியை கையாள்வது ரசிகர்களுக்கு பெரிய அளவில் விருப்பமாக அமையவில்லை.

இருந்தும் நிகழ்ச்சி நடந்துவரும் நிலையில், கடந்த மூன்று வாரங்களாக டபுள் எபிக்‌ஷன்களாக நடந்து வருகிறது. 84 நாட்களை கடந்து இருக்கும் இடையில் இன்னும் பினாலே நடக்க மூன்று வாரங்களுக்குள் தான் இருப்பதால் தற்போது இறுதி கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் முதல் பாகமாக டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் நடத்தப்பட இருக்கிறது. இதில் மொத்தம் 10 போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்.

கடைசி வார நாமினேஷனில் மட்டுமே அவர் உள்ளே செல்வார். இந்த வாரமாவது ரசிகர்களிடம் டிஆர்பி அதிகரிக்கும் என பல வித்தியாசமான டாஸ்குகளை தயாரிப்புகளும் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் தொடங்கப்பட்ட முதல் டாஸ்கில் சௌந்தர்யா வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் முத்துக்குமார் மற்றும் சௌந்தர்யா இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் போல இந்த வாரமும் கேப்டன் பதவி இல்லாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News