Biggboss Tamil: சௌந்தர்யாவுக்கு தயாராகும் மஞ்சள் கார்டு… இந்த வார VJSக்கு செம வேலை இருக்குமோ?

செளந்தர்யா தொடர்ந்து அட்டகாசங்களை செய்து வருகிறார்.

By :  Akhilan
Update: 2024-12-12 12:29 GMT

Biggboss Tamil: பிக் பாஸ் சீசன்8 தற்போது நடந்து வரும் முதலாளி மற்றும் யூனியனுக்கான டாஸ்க் சௌந்தர்யா இல்லை மீறி இருப்பதாக வெளியான ப்ரோமோவின் மூலம் அவருக்கு விதி மீறியதற்கான மஞ்சள் அட்டை கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 8 கடந்த வாரத்திலிருந்து மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக இதன் டிஆர்பியும் அதிகரித்து வருகிறது. இதனால் மேலும் பரபரப்பை ஏற்படுத்த இந்த வாரம் முதலாளி மற்றும் யூனியனுக்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வேலை ஆட்களாக இருக்கும் போட்டியாளர்கள் சைக்கிள் மிதித்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி அவர்கள் நிறுத்தும் பட்சத்தில் வீட்டில் உள்ள இடங்களை பயன்படுத்த முடியாமல் போகும். இதனால் போட்டியாளர்கள் பிரச்சினையாகி ஒவ்வொருவருக்குள் சண்டையாகி வருகிறது.

ஏற்கனவே முத்துக்குமார் மற்றும் அருணுக்கு இடையே சண்டை உண்டானது. இதில் போட்டியை கெடுக்கும் விதமாக அருண் நடந்து கொண்டது ரசிகர்களிடம் அதிருப்தியையும் உருவாக்கியது. இருந்தாலும் போட்டி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

அவ்வப்போது ஒரு போட்டியாளர்களை யூனியனில் இருந்து முதலாளியாக மாற்றியும், முதலாளியில் இருந்து யூனியன் அனுப்பி தண்டனையும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் அன்ஷிதா மற்றும் சௌந்தர்யா இடையே பிரச்சனை வெடித்தது.

இதில் மழையில் நின்று கொண்டு அன்ஷிதா பேசும்போது கோபமாக வரும் சௌந்தர்யா அவரின் குடையை பிடித்து இழுப்பது புரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. மேலும் ரானவிடம் எகிறிக்கொண்டு வருவதும் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி பேசும்போது சண்டையில் ஒருவருக்கொருவர் எகிறிக் கொண்டு வராதீங்க. அப்படி தான் செய்வேன் என நினைப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிடலாம் என கண்டிப்பாக கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் சௌந்தர்யா அதுபோலவே நடந்திருக்கிறார்.

இதன் மூலம் அவருக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சௌந்தர்யா இதுபோல் பலமுறை நடந்திருப்பதால் அவருக்கு ரெட்கார்ட் கொடுக்கவும் தயாரிப்பு குழு முடிவெடுக்கலாம் எனவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Tags:    

Similar News