பிரபுவின் கோபம்… எழிலின் முயற்சி… கருணாகரனின் பிளான்… நந்தினியின் கண்ணீர்!...
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் புரோமோ தொகுப்புகள்
Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் டிஆர்பி டாப் ஹிட்டில் இருக்கிறது. இதன் இன்றைய எபிசோட் புரோமோ குறித்த அப்டேட்களின் தொகுப்புகள்.
மருமகள்
பிரபு மற்றும் அவர் தம்பிக்கு இடையே சண்டை நடக்கிறது. பிரபு அப்பா அவன் எப்படி தருவான் எனக் கேட்க அதான் கைவசம் தொழில் வச்சிருக்கான் எனக் கூறுகிறார். இதில் கடுப்பாகும் பிரபுவின் தம்பி சண்டைக்கு வருகிறார். இதில் கடுப்பாகும் பிரபு அடித்துவிடுகிறார்.
வேல்விழிக்கு கால் செய்து அத்தை வீட்டில் நடப்பதை சொல்கிறார். என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பார் எனக் கூற அப்பத்தா வந்துவிடுகிறார்.
ஆதிரையின் அப்பா கோபமாக செந்தில் மற்றும் அவர் அம்மாவை வீட்டுக்குள் வந்ததுக்கு திட்டுகிறார். ஆதிரை இது எங்க வீட்டு பிரச்னை நீங்க தலையிடாதீங்க என பேச அப்பா ஷாக் ஆகிறார்.
சிங்கப்பெண்ணே
போட்டியில் ஆனந்தி வெல்ல என்ன சார் இப்பையாது ஆனந்தியை டெய்லரா ஏத்துக்கிறீங்களா என அன்பு கேட்கிறார். கருணாகரன் மித்ரா, உங்க கூட பட்டிக்காடு தங்கி இருக்கா? நாளைக்கு ஒருநாள் வரவிடாம பார்த்துக்கோங்க என்கிறார். ஆனந்தி பார்ப்போம் நமக்குல யாரு ஜெய்ச்சாலும் சநதோஷம்தான். ஆனா அந்த கருணாகரன் ஜெயிக்க விடக்கூடாது என்கிறார்.
மூன்று முடிச்சு
சூர்யா கால் செய்து எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு வேலை என வேலைகாரரிடம் சொல்கிறார். அருணாச்சலம் சுந்தரவல்லியிடம் நீ அசிங்கப்படுத்துனது அவளை இல்லை என்னை.
சுந்தரவல்லி அவளை இந்த வீட்டை விட்டு தொரத்தனும் என்கிறார். நந்தினி தன் அக்காவிடம் இந்த சின்ன விஷயத்தை கூட என் அம்மாவுக்கு செய்ய முடியாத கையாலாகாதவளா இருக்கேனே என அழுகிறார்.
கயல்
என்னோட நீ காசுக்காக பழகுனனு சொல்றவங்க முன்னாடி என் வெற்றி தான் கரியை பூசணும் என்கிறார். அன்புவுக்கு கால் செய்து அவர் காதலி நம்ம கல்யாணத்தை யாரும் தடுக்க முடியாது. அதுக்கு இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் என்கிறார். சிவசங்கரியால் எழிலுக்கு லோன் கிடைக்காமல் போக அவங்க சொல்றாங்கனு லோன் இல்லனு சொல்றது தப்பா இருக்கு சார் என்கிறார்.