கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. மொத்த பிக்பாஸ் ரசிகர்களுக்கும் இன்னைக்கு கறிவிருந்தா?.. இல்ல பழய கஞ்சியா..!
Biggboss tamil: ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான பிக்பாஸ் ஏழாவது சீசனின் இந்த வார இறுதியை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ப்ரதீப்புக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டில் துவங்கப்பட்ட பிரச்னை ஒரு வாரத்தினை கடந்து அடுத்த வாரத்தில் வந்து நிற்கிறது.
கடந்த வாரம் பெண்கள் பாதுகாப்பு கருதி ப்ரதீப்புக்கு ரெட் கார்டை கமல் கொடுத்தனுப்பினார். ஆனால் ரசிகர்கள் எல்லாருமே கொந்தளித்து விட்டனர். போட்டியாளர்கள் கொடுத்த எல்லா புகாரையும் ஆதாரத்துடன் பொய் என ரசிகர்களே நிரூபித்துவிட்டனர்.
இதையும் வாசிங்க:ஆண்டவரே ‘தக் லைஃப்ல’ இருந்த காஸ்டியூம்லயே வாங்க! நாளைக்கு தேவைப்படும் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்
தொடர்ந்து அர்ச்சனா, விசித்ரா, தினேஷை தொடர்ந்து விஷ்ணு வரை பெண்கள் இணைந்து இதை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே செய்து விட்டதாக சண்டைக்கு நின்றனர். மாயா, பூர்ணிமா, ஐஸு, ஜோவிகா, நிக்சன் ஆகியோருக்கு புல்லி கேங்க் எனப் பட்டமே கொடுக்கப்பட்டது.
ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் ஐவரும் எதிர்ப்பை சம்பாரித்து வைத்துள்ளனர். இதையடுத்து கமல் தான் அப்படி ஒரு தீர்ப்பு கொடுத்ததாக அவர்கள் பேசியது, மாயா, பூர்ணிமா பேசிய ஏ ஜோக்குகள் என அனைத்துமே ரசிகர்களிடம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வார இறுதியில் கமல் பேசி நிறைய கண்டெண்டுகளை போட்டியாளர்களே தயாரித்துவைத்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வினுஷா குறித்து நிக்சனின் ஆபாசமான கமெண்ட்டை வேறு வைரலாக்கி வரும் நிலையில் அதற்கு கமல் தரப்பில் இருந்து மஞ்சள் கார்டு கொடுக்கப்படுமா எனவும் கேள்விகள் எழுந்துள்ளது.
இதையும் வாசிங்க:தீபாவளி அன்னைக்காது சண்டை இல்லாம இருக்கீங்களே… மொக்கை வாங்கிய முத்து..!
இதைவிட முக்கியமாக, புல்லி கேங்கின் முக்கிய ஆளான பூர்ணிமாவும், ஐஷுவும் நாமினேஷனில் இருக்கின்றனர். அவர்களில் பூர்ணிமா எலிமினேட் ஆவார் என எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஐஸுவும் சேர்ந்து இருவரையுமே வெளியேற்றும் வாய்ப்பும் இருக்கிறதாம். இதனால் ரசிகர்கள் வேட்டைக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால் கமல் இன்றைய ஷோவில் புஸ்வானம் ஆக்கிவிடுவாரோ என பயமும் ரசிகர்களுக்கு இருக்கிறதாம். இந்த ஒரு வாரத்தில் அவர் பல வருடங்களாக சேர்த்து வைத்த புகழே கேள்வி எழுப்பப்பட்டு இருக்கும் நிலையில் கண்டிப்பாக அதிரடி நடவடிக்கைகள் தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.