தீபாவளி அன்னைக்காது சண்டை இல்லாம இருக்கீங்களே… மொக்கை வாங்கிய முத்து..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் குடித்துவிட்டு வரும் முத்துவிற்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட சொல்கிறார் மீனாவின் அம்மா. முத்து சாப்பிடாமல் என் கார் போச்சு. எல்லாம் உங்க பொண்ணால தான் புலம்பி தள்ளுகிறார். பின்னர் மீனா அம்மாவிடம் மீனா செஞ்சது தப்பு தானே எனக் கேட்கிறார்.

அவ செஞ்சது தப்புதான் மாப்பிள்ளை என்கிறார். இங்க நான் சாப்பிடக்கூடாது. ஆனா எங்க அப்பா சொன்னதால சாப்பிடுறேன் எனச் சொல்லிக்கொண்டே சாப்பிடுகிறார். மீனா மாதிரி இருக்காதீங்க எனவும் புலம்புகிறார்.

இதையும் வாசிங்க:ஆண்டவரே ‘தக் லைஃப்ல’ இருந்த காஸ்டியூம்லயே வாங்க! நாளைக்கு தேவைப்படும் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்

இதையடுத்து நடு ராத்திரியில் அண்ணாமலை, விஜயா, ரோகினி, மனோஜ் வெடி வெடித்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இதை பார்த்த ரவி அவர் குடும்பத்துடன் கொண்டாடிய தீபாவளியை நினைத்து கண்ணீர் விடுகிறார்.

அதை தொடர்ந்து வீட்டுக்கு வந்து கலங்கி உட்கார்ந்து இருக்க ஸ்ருதி சமாதானம் செய்து வைத்து தீபாவளிக்கு வெடி வெடிக்க அழைத்து செல்கிறார். அங்கு காரில் இருக்கும் பிஜூ என்னை ஏமாற்றிவிட்டு வெடியா வெடிக்கிற என திட்டிக்கொள்கிறார்.

இதையடுத்து ஸ்ருதியை கார் விட்டு ஏத்தப்போக அதை கவனித்து நகர்ந்து விட லேசாக அடிப்பட்டு விடுகிறது. இதையடுத்து அவரை உள்ளே அழைத்து சென்று ரவி மருந்து போட்டு விடுகிறார். மீனா வீட்டில் இருக்கும் முத்து நேத்து நான் குடிச்சிட்டு வந்தது தப்பு அத்தை. மன்னிச்சிடுங்க என்கிறார்.

இதையும் வாசிங்க:படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளம்பிய ஜெயலலிதா!.. பதறிப்போன இயக்குனர்.. நடந்தது இதுதான்!…

எல்லாருக்கும் கஷ்டம் இருக்கும் மாப்பிள்ளை. அதுக்கு குடிச்சா சரியாகிடாது என ஆறுதல் சொல்கிறார். இதையடுத்து சத்யா தான் தலைக்கு எண்ணெய் வைக்கணும் எனச் சொல்ல அதெல்லாம் தேவையே இல்ல. நானே வச்சிக்கிறேன் எனக் கூறி காபியை தலைக்கு ஊத்தி விடுகிறார். இதை பார்த்து மீனாவும், சீதாவும் வாய் விட்டே சிரித்து விடுகின்றனர்.

இதையடுத்து நான் பாத்ரூம்லேயே வச்சிக்கிறேன் என உள்ளே போய் விடுகிறார். பின்னர் அனைவரும் ரெடியாகி இருக்க முத்துவுக்கு மோதிரம் போட வருகின்றனர். நீங்க போட்ட செயினுக்கு நான் பட்டதே போதும். எல்லாத்தையும் உங்க பொண்ணுக்கே போடுங்க என முத்து சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it