அய்யோ அக்கா இனிமே என்ன ஆட்டம் ஆடுமோ.. ரசிகர்கள் குஷியாக்கும் இந்த வார எலிமினேஷன்..! வைரலாகும் தகவல்..!

by Akhilan |
அய்யோ அக்கா இனிமே என்ன ஆட்டம் ஆடுமோ.. ரசிகர்கள் குஷியாக்கும் இந்த  வார எலிமினேஷன்..! வைரலாகும் தகவல்..!
X

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸின் ஏழாவது சீசனில் இந்த வார எலிமினேஷன் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவரை எலிமினேட் செய்வதால் பிக்பாஸ் டீமே கொஞ்சம் பதறி போய் தான் இருக்கும் என்ற ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் எப்போதுமே மிகப்பெரிய அளவில் ரீச் கொடுக்கும். இந்த சீசன் தான் கிட்டத்தட்ட வெறும் குழாயடி சண்டையை மட்டுமே நம்பி ஒளிபரப்பி வருகிறார்கள். போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு கண்டெண்ட் கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என் வாழ்க்கையில் முக்கிய 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள்.. மனம் திறந்து சொன்ன விஜயகாந்த்…

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக பூர்ணிமாவை வெளியேற்ற ரசிகர்கள் போட்டா போட்டி போட்டு வோட் போட்டாலும் பிக்பாஸ் டீம் அவரை காப்பாற்றி வந்தனர். ஆனால் இந்த வாரம் ஜோவிகா, பூர்ணிமா இரண்டும் பேருமே நாமினேஷனில் இருக்கிறார்கள்.

இருவரில் ஒருவரை காப்பாற்ற தான் முடியும். ஏனெனில் அன் அபிஷியல் வோட்டிங்கிலே ஜோவிகா ரொம்பவே பின் தங்கி இருக்கிறார். அவருக்கு பதில் பூர்ணிமாவையே காப்பாற்றி விடலாம் என்பது பிக்பாஸ் டீமின் எண்ணமாக இருக்கலாம். சரவண விக்ரமை காவு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு இந்த வாரம் வோட்டிங் சரியாக விழுந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி ஜோவிகா தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் கூட இவரின் தாயும், நடிகையுமான வனிதா விரைவில் ஃபேமிலி வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் போவேன் என வாய் பேசி இருந்தார்.

இதையும் படிங்க: பிரதீப் ரவீனாவிடம் சொன்ன அந்த வார்த்தை! ரெட் கார்டு கொடுத்ததை பற்றி அக்‌ஷயா சொன்ன பளீச் உண்மை

இனிமே வனிதா தன்னுடைய ரிவியூவில் என்ன ஆட்டம் ஆடுவாரோ என ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் டீமும் கதிகலங்கி இருப்பார்கள் என ரசிகர்கள் காமெடி செய்து வருகின்றனர்.

Next Story