சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க போறான்னு ஒப்பாரி வச்ச ரஜினி... நடிகவேள் பட்டத்தை ஏன் தூக்கி கொடுக்கிறாரு?
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிகவேள் என்கிற பட்டத்தை எஸ்.ஜே. சூர்யாவுக்கு வழங்கிய நிலையில், அதற்கு எதிராக வசைபாடும் விதமாக ப்ளூ சட்டை மாறன் நடிகர் ரஜினிகாந்தை படுமோசமாக விளாசி உள்ளார். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என சொல்லி விட்டார் என்றதும் ஒட்டுமொத்த ரஜினிகாந்த் ரசிகர்களும் கொந்தளித்தனர். இதையும் படிங்க: விஷ்ணு விஷாலை துரத்திய சூப்பர்ஸ்டார் சர்ச்சை!.. ஓவரா அடிக்காதீங்க என விளக்கம் […]
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிகவேள் என்கிற பட்டத்தை எஸ்.ஜே. சூர்யாவுக்கு வழங்கிய நிலையில், அதற்கு எதிராக வசைபாடும் விதமாக ப்ளூ சட்டை மாறன் நடிகர் ரஜினிகாந்தை படுமோசமாக விளாசி உள்ளார்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என சொல்லி விட்டார் என்றதும் ஒட்டுமொத்த ரஜினிகாந்த் ரசிகர்களும் கொந்தளித்தனர்.
இதையும் படிங்க: விஷ்ணு விஷாலை துரத்திய சூப்பர்ஸ்டார் சர்ச்சை!.. ஓவரா அடிக்காதீங்க என விளக்கம் கொடுத்த லால் சலாம் ஹீரோ!..
லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் மக்கள் திலகம்னா ஒருத்தர் தான், சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான் தலன்னா ஒருத்தர் தான் என வசனம் பேசினாலும், விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்த்தை வரிசைப்படுத்தியது விஜய் தவறு என்றும் பிரச்சனையை கிளப்பினர்.
ஆனால், அதன் பிறகு தலன்னா ஒருத்தர் தான் என சொல்லி விட்டு கடைசியில் தான் தளபதி என்றே விஜய் சொன்னதை எல்லாம் வான்ட்டட்டாக ரஜினி ரசிகர்கள் மறந்து விட்டனர்.
இதையும் படிங்க: வேறலெவல் கும்தாவா இருக்காரே ஷாலு ஷம்மு!.. ஒரு வாரத்துக்கு தூக்கம் வராதே.. ஓவரா உச்சிக்கொட்டும் ஃபேன்ஸ்!..
இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடிகவேள் என்கிற பட்டத்தை கொடுத்திருந்தார். ஏற்கனவே நடிப்பு அரக்கன் என்கிற பட்டம் சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், இன்னொரு பட்டம் அதுவும் சூப்பர்ஸ்டாரே கொடுத்துள்ளாரே என எஸ்.ஜே. சூர்யாவே சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ப்ளூ சட்டை மாறன், ”எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் நடிகவேள் - தலீவர் பாராட்டு.
'ஏன்டா டேய்!.. நான்தான் ஒரே சூப்பர்ஸ்டார்... போட்டிக்கு வராங்க.. பட்டத்தை பறிக்க போறாங்கன்னு ஒப்பாரி வச்சியே!...
இப்ப நடிகவேள் பட்டத்தை மட்டும் இன்னொருத்தருக்கு தூக்கி கொடுப்பியா? இங்க ஒரே ஒரு நடிகவேள்தான்.. அது நான் மட்டும்தான். உனக்கு வேணும்னா நடிக தேள், நடிக வாள்னு வேற பட்டத்தை குடு. இல்லன்னா மூடிட்டு இரு” என டிவிட்டரில் எம்.ஆர்.ராதா பேசுவது போல் பதிவிட்டுள்ளார்.
அதே நேரம் வாடா போடா என பேசுவது எம்.ஆர்.ராதாவின் ஸ்டைல்.. அவர் இதை கேட்பது போலத்தான் இந்த பதிவு. நான் ரஜினியை அப்படி சொல்லவில்லை எனவும் கமெண்ட்டில் தெரிவித்துள்ளார்.