இதுதான் புள்ளி விபரம்!.. யார் பருந்து?.. யார் காக்கா?.. ரஜினியை விடாமல் விரட்டும் புளூசட்டமாறன்...
கடந்த சில நாட்களாகவே இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினியே இதை விட்டாலும் கூட ஊடகங்கள் சும்மா இருப்பதில்லை. எல்லோரிடமும் இதே கேள்வியை கேட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் வாரிசு படத்தில் விஜய் நடித்து கொண்டிருந்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ‘விஜய்தான் சூப்பர்ஸ்டார்’ என ஒரு பேட்டி கொடுத்தார். அதேபோல், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமாரும் அதையே சொன்னார். ஆனால், விஜய் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, விஜயே அதை […]
கடந்த சில நாட்களாகவே இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினியே இதை விட்டாலும் கூட ஊடகங்கள் சும்மா இருப்பதில்லை. எல்லோரிடமும் இதே கேள்வியை கேட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் வாரிசு படத்தில் விஜய் நடித்து கொண்டிருந்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ‘விஜய்தான் சூப்பர்ஸ்டார்’ என ஒரு பேட்டி கொடுத்தார். அதேபோல், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமாரும் அதையே சொன்னார்.
ஆனால், விஜய் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, விஜயே அதை விரும்புவதாக ரஜினி ரசிகர்களால் பார்க்கப்பட்டு, அது கோபமாக மாறியது. எப்போதும் எங்கள் தலைவர்தான் சூப்பர்ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் களம் இறங்க, விஜய் ரசிகர்கள் அவர்களுடன் மோத டிவிட்டரே களோபரமானது.
இதையும் படிங்க: ரஜினி vs விஜய்! சூப்பர்ஸ்டார் பட்டமே நிரந்தரமில்லை – ஏன்டா போட்டி போடுறீங்க? கடுப்பான சேரன்
இதற்கிடையில் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலில் ‘இவன் பேர தூக்க 4 பேரு.. பட்டத்தை பறிக்க நூறு பேரு’ என வரிகள் வந்தது. அதேபோல், ஜெயிலர் பட விழாவில் பேசிய ரஜினி ‘பருந்து உயரத்துக்கு பறக்கணும்னு காக்கா முயற்சி செய்யும். ஆனால், கீழ விழுந்துடும்’ எனப் பேச அவர் விஜயைத்தான் சொல்கிறார் என விஜயின் ரசிகர்கள் பொங்க துவங்கிவிட்டனர்.
ஒருபக்கம், டிவிட்டரில் ரஜி்னியை கடுமையாக விமர்சித்து வரும் புளூசட்ட மாறன், ரஜினி என்னைத்தான் காக்கான்னு சொல்கிறார்.. விஜயைத்தான் சொல்கிறார் என தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், டிரெய்லர் மற்றும் டீசர் வீடியோக்களை ஓப்பிட்டு பார்த்தால் மாஸ்டர் 76 மில்லியன், பீஸ்ட் 62 மில்லியன், வாரிசு 51 மில்லியன் வியூஸ் போனது.
ஆனால், பேட்ட 29 மில்லியன், தர்பார் 20 மில்லியன், அண்ணாத்த 17 மில்லியன், ஜெயிலர் இதுவரை 17 மில்லியன் வியூஸ் போயுள்ளது. இதிலிருந்து ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. பருந்து யாரு.. காக்கா யாருன்னு நமக்கெல்லாம் தெரியும் என ரஜினியை வாரியுள்ளார்.
ரஜினி பருந்து - காக்கா கதையை பொதுவாகத்தான் சொன்னார். இதை எந்த நடிகரோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் எனவும் சொன்னார். அதேபோல், ‘நான் சொன்னாலும் கேட்கபோவதில்லை.. ஊடகங்கள் அதைத்தான் செய்யும்’ எனவும் சொன்னார். அவர் சொன்னதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: எனக்கு அவர் மட்டும்தான் போட்டி!.. வேற எவனும் இல்ல!.. ரஜினி கணக்கு இதுதானாம்!…