ரெண்டு வாரத்தைக் கடந்தும் அடங்காத டிராகன்... கொட்டும் வசூல்..!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் பட்டி தொட்டி எங்கும் இன்றளவும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்தப் படத்தின் வசூல் இந்தளவு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அதற்குக் காரணம் இன்றைய இளைஞர்களின், குறிப்பாக மாணவர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து படத்தை திறம்பட இயக்கியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இந்தப் படத்தின் வசூல் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. இதில் இருந்தே இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எந்தளவு ரீச்சாகியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
மாறுபட்ட கோணத்தில் போஸ்டர் டிசைன்: ஆரம்பத்தில் காதலிக்காக நல்லா படித்த மாணவன், பின்னால் அவளுக்காகவே படிக்காமல் காலேஜில் கெத்தாக திரிந்த மாணவன் பின்னால் படிப்பதற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறான் என்பதை அப்பட்டமாகக் காட்டி இருக்கிறது படம்.
அதுவும் 48 அரியர்ஸ்சை முடிப்பதற்காக புத்தகத்தின் குவியலில் ஏறி அமர்ந்து விழுந்து விழுந்து படிப்பது போல படத்தின் ஹீரோவான அஸ்வத் மாரிமுத்து இருக்கும் போஸ்டர் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது. அவரது பாடி லாங்குவேஜ் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.
இதுவரை வசூல்: தற்போது ரெண்டு வாரத்தைக் கடந்தும் டிராகனின் வசூல் எகிறிக்கொண்டே தான் போகிறது. முதல் வாரத்தில் மட்டும் இந்திய அளவில் 50.3கோடியை வசூலித்தது. 2வது வாரத்தில் மட்டும் 31.9கோடியை வசூலித்தது. 15வது நாளில் 2.05கோடியும், 16வது நாளான நேற்று 3.65கோடியையும் வசூலித்து இதுவரை மொத்தம் 87.90 கோடியை வசூலித்து பிரமிக்க வைத்துள்ளது.
படம் வெளியாகி பத்தாவது நாளிலே பாக்ஸ் ஆபீஸ் உலக அளவில் டிராகன் 100 கோடியை ஈட்டியதாகக் கெத்தாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில தினங்களில் இந்திய அளவிலும் இந்த 100 கோடி எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.