4 நாள்களுக்குப் பிறகு வசூலில் ஜெயித்தது எது? சப்தமா? அகத்தியாவா?
தமிழ்த்திரை உலகில் திகில் படங்களுக்கு எப்போதுமே மவுசு தான். சில வருடங்களுக்கு முன்பு ஈரம் என்ற ஒரு படம் வெறும் தண்ணீரை மையமாகக் கொண்டு திகில் அடையச் செய்தது. படம் பார்த்த ரசிகர்கள் பயத்தில் உறைந்தனர்.
அந்தத் தண்ணீர் நம்மை எப்படி எல்லாம் பயமுறுத்துகிறது என்பதை அருமையாக எடுத்திருந்தார்கள். அதே போல இப்போது இசை எப்படி நம்மை திகில் அடையச் செய்கிறது என்பதை மையமாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அது தான் சப்தம்.
திகில் படங்கள்: சப்தம், அகத்தியா என இரு படங்கள் கடந்த 28ம் தேதி வெளியாகின. இந்தப் படங்களில் சப்தம் திகில் படம். அது இசையை மையமாகக் கொண்டே ரசிகர்களைக் கதிகலங்கச் செய்து விட்டது. மற்றொன்று அகத்தியா. பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியுள்ள வித்தியாசமான திரில்லர் படம். இப்படி இரு திரில்லிங் படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகி உள்ளன. இந்த போட்டியில் யார் முன்னணியில் இருக்கிறார்?
முதலிடம்: இரு படங்களும் 4வது நாளில் செய்த கலெக்ஷனைப் பார்க்கலாம். 4வது நாளில் அகத்தியா படம் 25 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது. இது 3வது நாள் வசூலை விட 64 சதவீதம் குறைவு தான். அந்தவகையில் அகத்தியா படத்தின் மொத்த வசூல் 2.54கோடி. தற்போது 3 கோடியை நெருங்கியுள்ளது. இதனால் சப்தம் படம் 31 சதவீதம் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
சப்தம் - அகத்தியா: சப்தம் படத்தை அறிவழகன் வெங்கடாசலம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆதி பினிசெட்டி, லட்சுமிமேனன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசை அமைத்துள்ளார்.
அகத்தியா படத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பாடலாசிரியர் பா.விஜய் 2015ல் ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.