கேம் சேஞ்சர் 2ம் நாள் வசூலில் சூடு பிடித்ததா? இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் நேற்று முன்தினம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தில் பல மைனஸ்கள் இருந்தாலும் ராம்சரண் போட்ட எபெக்ட்டுக்காகப் படத்தைப் பார்க்கலாம். இன்னொரு புறம் வழக்கமான ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் பார்க்கலாம்.
கேம் சேஞ்சர்: ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். கியாரா அத்வானி ரொம்ப அழகா இருக்கிறார். எஸ்ஜே.சூர்யா கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளார்.
படத்தில் இடைவேளை வரை ஸ்மார்ட்டாகவும், இடைவேளைக்குப் பிறகு இன்ட்ரஸ்ட்டாகவும் போகிறது. ரசிகர்களுக்கு ஷங்கரின் பழைய படங்களைப் பார்த்தது போல இருந்தாலும் சில இடங்கள் நம்மை ரசிக்க வைக்கிறது.
விஷூவல் எபெக்ட்: தமனின் இசையில் 'ஜருகண்டி' பாடல் இளசுகளை ரசிக்க வைக்கிறது. அதே போல 'தொப்' பாடல் முழுக்க விஷூவல் எபெக்ட் கிறுகிறுக்க வைத்துவிடுகிறது. ராம்சரண் திக்குவாயுடன் வித்தியாசமாக அட்டகாசமாக நடித்துள்ளார். அவரது மனைவியாக அஞ்சலி அம்சமாக வருகிறார். அவர் பறை அடித்தபடி போடும் பிளாஷ்பேக் காட்சியும் ரசிக்க வைக்கிறது.
தற்போது படம் வெளியாகி 2 நாள்கள் ஆகிறது. பொங்கலையொட்டி ரிலீஸ் ஆன இந்தப் படத்திற்கு வரும் செவ்வாய்க்கிழமை முதல் வசூலில் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. கடந்த 2 நாள்களாக படத்தின் வசூல் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
25 கோடி: கேம் சேஞ்சர் இந்திய அளவில் முதல் நாளில் தெலுங்கில் 42 கோடியை அள்ளியது. மொத்த வசூலாக 52 கோடியை அள்ளியது. 2வது நாளில் தெலுங்கில் 15 கோடியும், இந்தியில் 7.50 கோடியும், தமிழில் 2.50 மொத்த வசூலாக 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மொத்தம் 2 நாளில் இந்திய அளவில் 86 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. முதல் நாளில் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் 51கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.