தனுஷுக்கு ஹிட் கொடுக்குமா குபேரா?!. 2 நாள் வசூல் நிலவரம்!...

By :  MURUGAN
Published On 2025-06-22 07:51 IST   |   Updated On 2025-06-22 07:52:00 IST

kuberaa movie: தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் குபேரா. தெலுங்கில் சில நல்ல, வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் சேகர் கம்முலா இயக்கியுள்ள திரைப்படம் இது. இந்த படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழ், ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று மொழிகளிலும் வெளியானது. இதில், தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், தமிழில் மற்றும் ஹிந்தி மொழிகளில் பெரிய வரவேற்பு இல்லை. தமிழில் தனுஷுக்காக சில காட்சிகள் ஓடினாலும் கதையம்சம் ரசிகர்களை கவரவில்லை.

படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதி திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. படம் 3 மணி நேரத்திற்கும் மேல் ஓடுவதால் சலிப்பு தட்டுகிறது என்கிறார்கள் ரசிகர்கள். தன்னுடைய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற திட்டம் போடும் ஒரு கார்ப்பரேட் முதலாளி, நாகார்ஜுனாவின் அறிவுரைப்படி 4 பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை செல்போன் நிறுவனர்கள் போல மாற்றி அவர்களை பினாமியாக்கி மோசடி செய்கிறார்.


வேலை முடிந்தபின் பிச்சைக்காரர்களை கொலை செய்யவும் திட்டமிடுகிறார். இதை தெரிந்துகொண்டு தனுஷ் மட்டும் தப்பித்துவிடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. தனுஷ் தப்பித்து ஓடியதுமே கதை ஓரிடத்தில் நின்றுவிடுகிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.

படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இப்படம் முதல் நாளில் 15 கோடி வசூல் செய்தத்தாக சொல்லப்பட்டது. 2ம் நாளான நேற்று 16 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது 2 நாளில் குபேரா படம் 31 கோடி வரை வசூல் செய்திருக்கிறது என்கிறார்கள். அதேநேரம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதால் நாளை முதல் வசூல் குறையும் என்றே கணிக்கப்படுகிறது.

Tags:    

Similar News