ஹாய்! நான் ஒரு ஆக்டர்.. தன்னை அறிமுகம் செய்துகொண்ட விக்ரமுக்கு சச்சின் கொடுத்த அதிர்ச்சி

By :  ROHINI
Published On 2025-06-22 15:00 IST   |   Updated On 2025-06-22 15:00:00 IST

sachin

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வீரதீர சூரன் 2. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை .சமீப காலமாக அவர் நடித்து வெளியான எந்த ஒரு திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .அதனால் ஒரு சரியான வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம் .ஆரம்பத்திலிருந்து இப்போது வரை மாபெரும் வெற்றிக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

எத்தனையோ போராட்டங்கள் கஷ்டங்களை கடந்து இன்று ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு என எந்த ஒரு போட்டி நடிகரும் கிடையாது. அவருக்கு என ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டங்களையும் வைத்துக்கொண்டு டீசன்ட்டான படங்களை கொடுத்து வருகிறார். இவருடைய நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்தது .கரிகாற் சோழனாக இவர் நடித்த அந்த கதாபாத்திரம் இன்னும் மக்களின் மனதில் இருந்து நீங்கவில்லை.

குறிப்பாக விக்ரம் ஐஸ்வர்யா ராய் காம்போ என்றாலே அது ஒரு தனி கிரேஸ் தான். ஏற்கனவே இராவணன் திரைப்படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்திலும் அது தொடர்ந்தது. இந்த நிலையில் விக்ரம் ஒரு பழைய பேட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். விமான நிலையத்தில் பிளைட் ஏறுவதற்கு முன்பு வரை ரசிகர்கள் விக்ரமைப் பார்த்து செல்பி எடுத்துக் கொண்டும் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

பிளைட் ஏரியா பிறகு தன் இருக்கையில் அமர்ந்து திரும்பிய போது அருகில் சச்சின் அமர்ந்ததை பார்த்ததும் விக்ரமுக்கு பயங்கர அதிர்ச்சி. உடனே ஓ மை காட் என சத்தம் போட்டு கத்தி விட்டாராம். அதைக் கேட்டதும் சச்சின் திரும்பி பார்த்து சிரித்தாராம். உடனே விக்ரம் ஹாய் சார் என சொல்லி கை கொடுத்திருக்கிறார். சச்சினும் ஹாய் என சொல்லிவிட்டு அமைதியாக இருந்து விட்டாராம் .ஆனால் விக்ரமுக்கு சச்சினை பார்த்து விட்டோமே, அவர் அருகில் உட்கார்ந்து இருக்கிறோமே என்ற ஒரு மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு அதை குறுஞ்செய்தியாக அனுப்பி இருக்கிறார் .

இதைப் பற்றி கூறும் பொழுது தோனிக்கு என்னை தெரியும் .அமிதாப்பச்சனுக்கு என்னை தெரியும். ஆனால் சச்சினுக்கு தெரியாதே என்ன செய்வது எப்படி அறிமுகம் செய்து கொள்வது என மனதிற்குள் புலம்பி கொண்டே இருந்தாராம். அதுமட்டுமல்ல அதுவரை ரசிகர்கள் இவருடன் செல்பி எடுத்துக் கொண்டிருக்கையில் சச்சின் அருகில் உட்கார்ந்ததும் எந்த பசங்களும் வரவில்லையே யாராவது வாங்களேன்டா என்றும் மனதிற்குள் புலம்பி கொண்டே இருந்திருக்கிறார் விக்ரம்.

ஆனால் சச்சின் இருந்ததால் யாரும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என ஒரு ரூல்ஸ் போட்டிருந்தார்களாம் .அதனால் அவர்கள் இருக்கை அருகில் யாருமே போகவில்லையாம். அதன் பிறகு சரி நாமே பேசி விடுவோம் என ஹாய் சார் நான் ஒரு நடிகர் என ஆங்கிலத்தில் தன்னுடைய உரையாடலை ஆரம்பித்திருக்கிறார் விக்ரம். அதற்கு சச்சின் ஓ அப்படியா என கேட்டுவிட்டு நான் இந்தியா சினிமா படங்கள் எதுவும் பார்ப்பதில்லை என சொல்லிவிட்டாராம். உடனே விக்ரம் இந்திய சினிமா படங்களை பார்ப்பதில்லை என சொல்கிறார் எப்படி டப் செய்யப்பட்ட படங்களை பார்த்திருப்பார் என அந்த சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் விக்ரம்.

Tags:    

Similar News