டிடி நெக்ஸ்ட் லெவலை தாண்டிய மாமன்!.. சந்தானத்துக்கு ஷாக் கொடுத்த சூரி!...
DD Next Level: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சந்தானம் திரைப்படங்களில் கும்பலில் ஒருவராக கூட நிற்கும் வேடத்தில் நடித்தார். அதன்பின் சிம்பு மூலம் மன்மதன் படத்தில் காமெடி நடிகராக உயர்ந்தார். அதன்பின் பல படங்களிலும் காமெடி நடிகராக நடித்து ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.
திடீரென இனிமேல் ஹீரோதான் என அறிவித்து கடந்த 10 வருடங்களாக கதையின் நாயகனாகவே நடித்து வருகிறார். அதேநேரம், தன்னுடைய ரூட் காமெடி என்பதை புரிந்துகொண்டு முழுக்க சீரியஸான படங்களை செய்யாமல் காமெடி கலந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்போது அவரின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாகியுள்ளது.
ஒருபக்கம் சூரி சினிமாவில் கஷ்டப்பட்டு காமெடி நடிகராக மாறி பல படங்களிலும் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. விடுதலை படம் மூலம் கதையின் நாயகனாக மாறிய சூரி தொடர்ந்து தனக்கேற்ற கதைகளில் நாயகனாக நடித்து வருகிறார்.
சூரியின் மாமன் படமும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. டிடி நெக்ஸ்ட் லெவல் படமும், மாமன் படமும் ஒரே நேரத்தில் வெளியானதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. மாமன் குடும்ப செண்டிமெண்ட் படமாகும், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ஹாரர் காமெடி படமாகவும் உருவாக்கப்பட்டிருந்தது.
முதல் 2 நாட்களில் மாமனை விட டிடி நெக்ஸ்ட் லெவல் படமே அதிக வசூலை பெற்றிருந்தது. அதாவது மாமன் படம் 4.13 கோடியையும், சந்தானம் படம் 5.75 கோடியையும் வசூல் செய்திருந்தது. ஆனால், 3வது நாளான நேற்று சந்தானம் படத்தை விட சூரியின் மாமன் படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது.
படம் வெளியாகி 3ம் நாளான நேற்று டிடி நெக்ஸ்ட் லெவல் படம் 3.30 கோடி வசூல் செய்ய, மாமன் படம் 4.25 கோடியை வசூல் செய்திருக்கிறது. படம் வெளியாகி 3 நாட்களில் டிடி நெக்ஸ்ட் லெவல் 9.40 கோடியையும், மாமன் படம் 8.95 கோடியையும் வசூல் செய்திருக்கிறது. மாமன் படத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட வசூலை நெருங்கிவிட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.