2வது நாளில் பறந்து போ, 3பிஎச்கே வசூல்... 8வது நாளில் மார்கன் வசூல்... முதலிடம் யாருக்கு?

By :  SANKARAN
Published On 2025-07-06 13:25 IST   |   Updated On 2025-07-06 13:25:00 IST

கடந்த வாரம் தமிழ்த்திரை உலகில் வெளியான 4 படங்களில் பறந்து போ, 3பிஎச்கே படங்கள் சக்கை போடு போட்டு வருகின்றன. அஃகேனம், ஃபீனிக்ஸ் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

மிர்ச்சி சிவா நடித்த பறந்து போ படம் பிக்கப் ஆகி வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே உள்ள உறவை அலசுகிறது படம். எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு அலையும் பெற்றோர்களுக்கு இது ஒரு பாடம். பிள்ளைகளையும் கொஞ்சம் கவனிங்க.

அவங்களுக்குன்னு தனி உலகம் இருக்கு. அதுக்கு அழைச்சிட்டுப் போங்கன்னு சொல்கிறது படம். கடன் என்பது எல்லாருக்கும் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்து வாழ்க்கையைத் தொலைச்சிடாதீங்க. பிள்ளைகளையும் கவனிங்க. அதுக பாவம் என்று சொல்கிறது படம்.

படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படம் வெளியான நாளில் அதாவது முதல் நாள் மாலை, இரவுக் காட்சிகள் எல்லாம் அதிகரித்துள்ளன. அதே போல 3பிஎச்கே படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.


சரத்குமார், தேவயாணி நடித்த இந்தப் படத்துல மிடில் கிளாஸ் ஃபேமிலி படும் கஷ்டங்களைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள். ஒரு வீடு கட்டுவதற்குள் என்ன பாடு படுகிறார்கள்? எப்படி பணத்தை சேமிப்பது? எப்படி கடனை அடைப்பதுன்னு படம் நம் வாழ்க்கையிலும் நடப்பதைப் போலவே காட்சிகளாக விரிகிறது.

முதல் இரு படங்களையும் ஒப்பிடும் போது 3பிஎச்கே படம் தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் விஜய் ஆண்டனி நடித்த மார்கன் 8 நாள் ஆகியும் வசூலில் 3பிஎச்கேவைத் தொட முடியவில்லை. வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

பறந்து போ படத்தின் 2வது நாள் வசூல் 1.3 கோடி. 3 பிஎச்.கே. படத்தின் 2வது நாள் வசூல் 2.5 கோடி. மார்கன் படத்தின் 8 நாள் வசூல் 2.2 கோடி. 

Tags:    

Similar News