எதிர்நீச்சல் ஷூட்டிங்கில் மீண்டும் மாரிமுத்து வருகிறாரா? இரண்டாம் சீசனில் நடக்கும் அமானுஷ்யம்!
Ethirneechal: பிரபல தமிழ் சீரியலான எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் நடந்து வருவதாக சீரியல் வட்டாரம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.
தமிழ் சீரியலான எதிர்நீச்சல் சன் டிவியில் ஒளிபரப்பான போது குடும்ப பெண்களை மட்டும் இல்லாமல் இளைஞர்களை வரை கவர்ந்தது. டிஆர்பியில் மிகப்பெரிய அளவில் ஹிட் சீரியலாக எதிர்நீச்சல் இருந்த போது அதில் முக்கிய கேரக்டரில் இருந்தவர் ஆதிகுணசேகரன் கேரக்டரில் இருந்த நடிகர் மாரிமுத்து.
கோபப்பட்டு அவர் நடிக்கும் போது அப்பட்டமான ரியல் கேரக்டராக பலருக்கும் மாரிமுத்துவை பிடித்தது. ஆனால் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் டப்பிங் சென்ற மாரிமுத்துவிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உடனே உயிரிழந்தார்.
இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தினையே இவரின் இறப்பு கவலை கொடுக்க எதிர்நீச்சல் சீரியல் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி இருந்தது. ஆதி குணசேகரன் கேரக்டரில் யார் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி அந்த சீரியலுக்குள் வந்தார்.
ஆனால் அவர் கேரக்டர் பெரிய எதிர்பார்ப்பு கொடுக்காத நிலையில் முதல் சீசன் பாதியிலேயே முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது அதே கேரக்டருடன் இரண்டாவது சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங்கில் நடக்கும் அமானுஷ்யம் விஷயத்தை சொல்லி இருக்கின்றனர்.
ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடிக்கும் போது அவரை சுற்றி ஒரு ஈ சுற்றிக்கொண்டே இருக்குமாம். அது யாரிடமும் போகாதாம். அவர் கையை விசிறினால் கூட மீண்டும் அந்த ஈ அவரையே சுற்றுமாம். நான் ஈ பாணியில் மாரிமுத்துதான் வந்துவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளதாம்.