கேஜிஎப் ஹீரோவுக்கு இசையமைக்கும் அனிருத்!.. பரபர அப்டேட்!..
Toxic Movie: 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் அனிருத். அதன்பின் பல படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினர். அவரின் இசையில் வெளிவந்த பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் இசையமைத்த பல படங்கள் ஹிட் அடித்தது.
ஒருகட்டத்தில் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார். விஜய்க்கு கத்தி, மாஸ்டர், லியோ போன்ற படங்களுக்கும், அஜித்துக்கு வேதாளம் படத்திற்கும் இசையமைத்தார். ரஜினிக்கு தர்பார், ஜெயிலர், வேட்டையன் போன்ற படங்களுக்கும், இப்போதும் கூலி, ஜெயிலர் 2 படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
கமலுக்கு இந்தியன் 2, விக்ரம் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். தமிழில் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலே அனிருத் இசை என்கிற நிலையும் உருவாகிவிட்டது. துவக்கத்தில் தனுஷின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார் அனிருத். ஆனால், சில மனக்கசப்புகளால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
சிவகார்த்திகேயனின் பல படங்கள் சூப்பர் ஹிட் அடிக்க அனிருத் இசை காரணமாக இருக்கிறது. ரஜினியின் நெருங்கிய உறவினரான அனிருத் தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற மொழி படங்களுக்கும் இசையமைக்க துவங்கிவிட்டார். தெலுங்கை பொறுத்தவரை ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்திற்கு இசையமைத்தார். இப்போது விஜய தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அதேபோல், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் மூலம் ஹிந்தியிலும் இசையமைக்க துவங்கினார். இந்நிலையில், யாஷ் நடிக்கவுள்ள கன்னட படமான டாக்சிக் படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கேஜிஎப் போல டாக்சிக் படமும் பேன் இண்டியா படமாக பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
அனிருத் கையில் நிறைய படங்கள் இருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு புது படங்களுக்கு இசையமைக்க முடியாத நிலையில் இருக்கிறார். ஆனாலும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பேன் இண்டியா படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொள்கிறார்.