Ace Vs Narivettai: ஏஸ் படத்தை அடித்துத் தூக்கிய நரிவேட்டை... முதல் நாள் வசூலில் மாஸ்!

By :  SANKARAN
Update: 2025-05-24 01:43 GMT

ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் நேற்று வெளியானது. விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மணி வசந்த், யோகிபாபு, திவ்யா பிள்ளை, ருக்மணி மைத்ரா, பிருத்விராஜ், பப்லு, ராஜ்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். சாம் சிஎஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்.

மலேசியாவில் ஒரு ஓட்டலில் வேலைக்குச் செல்கிறார். இன்னொரு பக்கம் ருக்மணியுடன் காதல். அவருக்கு ஒரு கட்டத்தில் பணம் தேவைப்படுகிறது. இதனால் சூதாட்டம் ஆடி ஜெயிக்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து அவரும் வில்லனின் நயவஞ்சகத்தால் தோற்கிறார்.

ஒரு சமயம் கடனாளி ஆகிறார். வில்லனோ கடனைத் தராவிட்டால் கொல்வதாக மிரட்டுகிறான். பணத்தேவையில் என்ன செய்வது என யோசிக்கிறார். வங்கிக்குப் போகும் 40 கோடியைக் கொள்ளையடிக்கிறார் விஜய் சேதுபதி. அதன்பிறகு நடந்தது என்ன என்பதுதான் கதை.

விஜய்சேதுபதி, ருக்மணி சிறப்பான நடிப்பு. யோகிபாபு காமெடி ஒர்க் அவுட் ஆகல. திரைக்கதை சரியில்ல. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. அனுராஜ் மனோகர் இயக்கிய நரிவேட்டை படத்தில் சேரன் நடித்துள்ளார்.

இது ஒரு மலையாளப்படம். தமிழிலும் டப் ஆகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பழங்குடியினருக்கு எதிராக அரசும், அதிகார வர்க்கமும் செயல்படுவதைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் இந்த இரு படங்களும் பெற்ற வசூல் விவரம் இதுதான்.


sacnilk ரிபோர்ட்டின் படி சேரன் நடித்த நரிவேட்டை படம் இந்திய அளவில் 1.75கோடியைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் 1 கோடி வசூலைப் பெற்றுள்ளது. அதனால் ஏஸ் படத்தை மிஞ்சியுள்ளது நரிவேட்டை. 

தரமான படத்துக்கு என்றைக்குமே வரவேற்பு நிச்சயம் உண்டு என்பதையே இந்த நரிவேட்டை வசூல் நிரூபித்துக் காட்டியுள்ளது. இப்போது இந்தப் படத்தைப் பற்றி பலருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளதால் போகப் போக இன்னும் நல்லா பிக்கப் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News