ஜூனியர் கேப்டனின் அதகளம்… கல்லா கட்டும் படைத்தலைவன்… முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவா?

By :  AKHILAN
Published On 2025-06-14 09:07 IST   |   Updated On 2025-06-14 09:07:00 IST

Padaithalaivan: பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று படைத்தலைவன் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் வெளியானது. கோலிவுட்டின் பிரபலங்கள் கூட இந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் வாழ்த்துக்களை சொல்லி ஆச்சரியப்படுத்தினர். இப்படத்தில் நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் அமைந்து இருந்தது.

கோட் படத்தில் ஏஐ வடிவில் விஜயகாந்தை கொண்டு வந்து இருந்தனர். ஆனால் அது பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனால் இப்படத்தில் விஜயகாந்தின் ஏஐ அமைப்பு பலருக்கும் ஆச்சரியப்படுத்து வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ஒரிஜினல் கேப்டனையே கண் முன் கொண்டு வந்து இருந்தனர்.

இதுமட்டுமல்லாமல் இளையராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அப்ளாஸ் குவித்தது. அதிலும் ஒரு சண்டை காட்சிக்கு பொட்டு வச்ச தங்க குடம் பாடலும் வாவ் சொல்ல வைத்தது. 

 

இப்படத்தின் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. சண்முக பாண்டியனின் நடிப்பு மட்டுமல்லாமல் அவருடைய சண்டை செய்யும் ஸ்டைல் கூட கேப்டனை நினைவுப்படுத்துவதாக பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

புலிக்கு பிறந்தது எப்படி பூனையாகுமா என ரசிகர்களும் சண்முக பாண்டியனை ஆகா ஓஹோ என புகழ்ந்து வந்தனர். முதல் ஷோவில் இருந்தே டிக்கெட் விற்பனை சூடு பிடித்தது. தற்போது ஹவுஸ்புல் காட்சிகளால் வசூல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படைத்தலைவன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 50 லட்சம் வரை குவிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News