எதே த்ரிஷ்யம் 3 இந்த வருஷமே ரிலீஸ் ஆகப் போகுதா?.. ஹாட்ரிக் அடிக்க ரெடியான லாலேட்டன்!..

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 3 படம் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாகவும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாக அதிக வாய்ப்புகள் என மலையாள திரையுலகில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.;

By :  SARANYA
Published On 2025-06-14 20:00 IST   |   Updated On 2025-06-14 20:00:00 IST

கடந்த சில ஆண்டுகளாகவே மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பல படங்கள் மண்ணைக் கவ்வி வந்தன. போன வருஷம் வெளியான மலைக்கோட்டை வாலிபன் மற்றும் மோகன்லால் முதன்முதலாக இயக்கி நடித்த பரோஸ் 3டி திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

அவ்வளவு தான் மோகன்லால் கரியரே மலையாள திரையுலகில் முடிந்தது என மம்மூட்டி ரசிகர்கள் எல்லாம் கிண்டலடிக்க இந்த ஆண்டு எம்புரான் 2 படத்தின் மூலம் 250 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தையே முந்தினார்.


அதனைத் தொடர்ந்து ஷோபனாவுடன் இணைந்து நடித்த துடரும் படத்தின் மூலம் மீண்டும் 250 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்து ஒரே ஆண்டில் 500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை சொந்தமாக்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 3 படம் வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாகவும் இந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாக அதிக வாய்ப்புகள் என மலையாள திரையுலகில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஷாருக்கான் ஒரே ஆண்டு 2500 கோடி வசூலை பாலிவுட்டில் நடத்தி ஹாட்ரிக் அடித்தது போல மலையாளை திரையுலகில் மோகன்லால் ஹாட்ரிக் அடிக்க உள்ளார். டிசம்பர் மாதம் மிஸ் ஆனாலும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகி விடும் என்கின்றனர்.

Tags:    

Similar News