71st National Film Awards: சிறந்த படத்திற்கான தேசிய விருதை தட்டிய தமிழ் படம்… தரமான அறிவிப்புதான்…

By :  Akhilan
Published On 2025-08-01 18:34 IST   |   Updated On 2025-08-01 18:34:00 IST

71st National Film Awards: 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது குறித்த ஆச்சரிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை பெரிய பிரம்மாண்ட திரைப்படங்கள் தான் இதுவரை நிர்ணயித்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் 2023 இல் வெளியான திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்களுக்கான 71வது தேசிய விருது அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பார்க்கிங் திரைப்படம் தட்டி தூக்கியிருக்கிறது. 

 

அறிமுகம் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்க்கிங். ஒரு பில்டிங்கில் இருக்கும் இரண்டு குடித்தன காரர்கள் வைத்திருக்கும் காரை கொடுத்திருக்கும் பார்க்கிங்யில் நிறுத்த போட்டுக்கொள்ளும் சண்டை தான் மொத்த படம்.

ஒரு சாதாரண பார்க்கிங் பிரச்சனையை வைத்து முழு படத்தை எடுத்திருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பரபரப்பாக எடுத்துக்கொண்டு சென்றதே இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது.

வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தற்போது சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டி இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே பிரம்மாண்டமாக வெளியாகும் படங்களை விட சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் தமிழ் படங்கள் தான் சிறந்த படமாக தேசிய விருதை பெறுவதும் வழக்கமாக மாறியிருக்கிறது.

Tags:    

Similar News