சூரியை மிஞ்சிய சந்தானம்... டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் நாள் வசூல்..!
நேற்று 3 காமெடி கதாநாயகர்களின் படம் வெளியாகி தமிழ் சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தியது. அந்த வகையில் சூரி நடித்த மாமன், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், யோகிபாபு நடித்த ஜோரா கையைத் தட்டுங்க ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. இதுல முதல் 2 படங்களின் வசூல் மற்றும் படத்தைப் பற்றிப் பார்ப்போம்.
சூரி இந்தப் படத்தில் தாய்மாமனாக வருகிறார். அவருக்கும் அவரது அக்கா மகனுக்கும் இடையே உள்ள உறவு ரொம்பவே நெருக்கமானது. அதன்பிறகு எப்படி அக்காவுடன் விரிசல் விழுகிறது. அதன்பிறகு சூரியுடனான உறவு என்னாகிறது? மீண்டும் சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
படம் முழுக்க சென்டிமென்ட், கதற விட்டுட்டாங்க. கண்ணீரும் கம்பலையுமாகத் தான் வரவேண்டி இருக்குன்னு சொல்றாங்க. அதே மாதிரி சந்தானம் நடித்துள்ள ஹாரர் காமெடி படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தில் சினிமாவை தப்புத் தப்பாக விமர்சனம் செய்பவர்களை ஒரு பேய் பழிவாங்குற கதை.
இந்தப் படத்தில் விமர்சகராக வருகிறார் சந்தானம். அவர் பேயிடம் சிக்கி எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. சினிமாவுக்குள் சினிமா, டெக்னிக்கல் என படத்தை இயக்கி காமெடி தந்துள்ளார் பிரேம் ஆனந்த். இந்தப் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் உள்ளது. செகண்ட் ஆஃப் காமெடி சூப்பர். இப்போது இந்த இரு படங்களின் முதல் நாள் வசூல் பார்க்கலாமா...
சேக் நில்க் அறிக்கையின்படி டிடி நெக்ஸ்ட் லெவல் முதல் நாளில் இந்திய அளவில் 2.85 கோடி வசூலித்துள்ளது. மாமன் படம் 1.75 கோடியை வசூலித்துள்ளது.
என்னதான் சூரி காமெடியில் இருந்து கதாநாயகனாக வந்தாலும் அவர் இன்னும் சீரியஸ் கேரக்டரில்தான் நடித்து வருகிறார். ஆனால் சந்தானம் காமெடியில் இருந்து ஹீரோவுக்கு வந்தாலும் கலகலன்னு காமெடி நாயகனாகவே கலக்குகிறார். காமெடிக்கு வறட்சி நிலவுவதால் சந்தானம் படத்துக்கு மாஸ் அதிகரித்துள்ளது என்றே தெரிகிறது.