விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய தனுஷ்!.. இனிமே எல்லாமே வேற லெவலில் இருக்குமாம்!...
Dhanush: துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய தனுஷ் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தாலும் ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளிலும் நடிக்கும் நடிகர் இவர். அப்படித்தான் ஆடுகளம், வட சென்னை, கர்ணன், அசுரன், குபேரா போன்ற படங்களில் நடித்தார்.
ஒருபக்கம் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கியே இயக்குனவர் அவதாரம் எடுத்தார். அந்த படம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. அதன்பின் அவரின் சகோதரியின் மகன் பவிஷை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கினார்.
மேலும், அவரே ஹீரோவாக நடித்து ராயன் படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது. அதன்பின் இட்லி கடை படத்தை இயக்கினார். இந்த படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது.
சமீபத்தில் குபேரா படமும் வெளிவந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியான இந்த படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் ஹிட் அடித்துவிட்டது. இப்போது ஒரு ஹிந்தி படத்திலும் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார்.
இந்நிலையில், தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் விஜயுடன் பீஸ்ட், சூர்யாவுடன் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தனுஷ் நடிக்கும் புதிய படத்தை போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார்.
அந்த படத்தில் மமிதா பைஜூ நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. எனவே, இதன்பின் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாரா என்கிற விபரம் தெரியவில்லை. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.