ஏழைகளின் இளையராஜா யார் தெரியுமா? மேடையில் நடந்த கலகல சம்பவம்!
சத்ய சிவா எழுதி இயக்கி வரும் படம் ப்ரீடம். சசிக்குமார், லிஜோமல் ஜோஸ், சுதேவ் நாயர், போஸ் வெங்கட், மாளவிகா அவினாஷ், மு.ராமசாமி, சரவணன், ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் படம். பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்துக்கான ப்ரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. அதில் சசிக்குமார், லிஜோமல் ஜோஸ், படத்தின் இயக்குனர் சத்யாசிவா, ஜிப்ரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு படம் நல்லா ஓடினபோதும் கூட தன்னோட சம்பளத்தை உயர்த்தாதவர்னா அது சசிக்குமார்தான் என்றும் தெரிய வந்தது.
அவரே பல தடவை இதைக் குறிப்பிட்டு சொல்லிருக்காரு. டூரிஸ்ட் ஃபேமிலி படம் வசூலை வாரிக்குவித்தது. அது தயாரிப்பாளர்களுக்குத் தான் லாபம். எனக்கு பேசினபடி சம்பளம் தந்தாலே போதும்னுதான் நான் நினைக்கிறேன் என்கிறார் சசிக்குமார்.
பெரும்பாலான கேள்விகளுக்கு சசிக்குமார் பதில் அளித்தார். காலேஜ்ல போய் என்னோட படத்தை நான் விளம்பரப்படுத்தி அவங்களை மிஸ்யூஸ் பண்ண விரும்பல. அவங்க படிக்கத்தான் வந்துருக்காங்கன்னு சொல்லி இருக்கிறார் நடிகர் சசிக்குமார்.
ஜிப்ரானிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். உங்களை ஆர்.கே.செல்வமணி சார் ஏழைகளின் இளையராஜான்னு சொன்னாரு. இளையராஜான்னா 2 கருத்து இருக்கு. மியூசிக்லயும் சிறப்பு. ஆக்டிவிட்டீஸ்லயும் சிறப்பு. நீங்க எப்படி இருப்பீங்கன்னு கேட்டார். அதற்கு ஜிப்ரான் பதில் சொன்னது இதுதான்.
அவரு சொன்னது பெரிய வார்த்தை. யார் நடிச்சிருக்காங்கன்னு பார்க்கறதை விட எனக்கு ஸ்கிரிப்ட், டைரக்டர் தான் முக்கியம். இதுல கூட நாகராஜ்னு ஒரு டைரக்டர் ஆக்ட் பண்ணிருக்காங்க. எனக்கு ரொம்ப பிடிச்சது. பிடிச்ச உடனே இந்தப் படத்துல நாம இருக்கணும்னுதான் வாரேன். நான் அந்தப் படத்தோட கமிட் ஆகிறதுக்கு என்னோட சினிமாவுல இருக்குற லவ் மட்டும்தான். வேற எந்தக் காரணுமுமே இல்லை என்கிறார் ஜிப்ரான். ப்ரீடம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.