ஜனநாயகன் ஆடியோ லான்ச் நடப்பது இங்குதான்!.. இந்த முறை மிஸ் ஆகாது!...

By :  MURUGAN
Published On 2025-07-21 19:16 IST   |   Updated On 2025-07-21 19:16:00 IST

Jananayagan: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். கோட் படத்திற்கு பின் விஜய் நடிக்கும் இந்த படம் அவரின் கடைசிப்படம் என அவரே சொல்லியிருக்கிறார். ஏனெனில், அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் சினிமாவில் இனிமேல் கவனம் செலுத்த முடியாது என விஜய் நினைக்கிறார். அதேநேரம், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்தே அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்கலாமா வேண்டாமா என்கிற முடிவை எடுப்பார் என கணிக்கப்படுகிறது.

ஜனநாயகன் படம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றாலும் அதில் விஜய்க்கு ஏற்றவாறு பல அரசியல் காட்சிகளையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். வளர்ப்பு மகளாக இருந்தாலும் அவரின் கனைவை நிறைவேற்ற துடிக்கும் அப்பா. அதில், கார்ப்பரேட் வில்லன் ஒருவன் தடையாக வர அப்பா பாலையா என்ன செய்கிறார் என்பதுதான் பகவந்த் கேசரி படத்தின் கதை.

ஆனால், தமிழுக்கு ஏற்றவாறு இதில் நிறைய மாற்றங்களை ஹெச்.வினோத் செய்திருக்கிறார். அதோடு, விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் அரசியல் தொடர்பான காட்சிகளையும் படத்தில் சேர்த்திருக்கிறார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாலே இது புரியும். விஜய் தொண்டர்களுடன் செல்பி எடுப்பது போலவும், கையில் சாட்டையை வைத்து சுழற்றுவது போலவும் போஸ்டர்களை வெளியிட்டார்கள்.


ஜனநாயகன் படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 121 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். வழக்கமாக விஜய் படங்களின் ஆடியோ லான்ச் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும். ஆனால், லியோ படத்திற்கே அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, அங்கு வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்களாம். ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு விழா நடந்த அதே அரங்கில் ஜனநாயகன் விழாவும் நடக்கவுள்ளது.

பட ரிலீஸுக்கு இன்னும் 5 மாதம் இருப்பதால் டிசம்பர் மாதம் ஜனநாயகன் இசை வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News