Singappenne: தீராத களங்கம் என கோபத்தில் கிளம்பிய வாணி, வேலு... கையெடுத்துக் கும்பிடும் அழகப்பன்!
சிங்கப்பெண்ணே சன் டிவி தொடர் பரபரப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. கோகிலாவின் கல்யாணம் நடப்பதற்குள் பல கலவரங்கள் வந்து விட்டன. அந்த வகையில் இன்றைய எபிசோடில் நடந்தது என்னன்னு பார்ப்போம்.
ஆனந்தியின் அக்கா கோகிலாவின் கல்யாண கொண்டாட்டம் தடபுடலாக நடக்கிறது. முன்னாளில் நலங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த வேளையில் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஷோபாவின் வைர அட்டிகை திருடு போகிறது. அது வாணியின் பேக்கில் இருந்ததால் அவள் தான் திருடியிருக்க வேண்டும் அல்லது அவளது கணவர் வேலு திருடி இருக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஷோபாவின் கணவர் சந்தேகப்படுகிறார்.
வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி வாணியையும், வேலுவையும் கேவலப்படுத்துகிறார். இது பொண்ணு வீட்டாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஆனந்தியும் செய்வதறியாது திகைத்து நிற்கிறாள். அழகப்பனும் அதே நிலையில் தான் இருக்கிறார். மகேஷ் இதற்கு என்ன தான் தீர்வு என யோசிக்கிறான்.
அந்த வேளையில் அன்பு திருடன் யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்னு மேடியைப் பிடித்து இழுக்கிறான். அவனும், ஆல்தோட்ட பூபதியும் இணைந்து தான் திட்டம் போட்டுள்ளார்கள். அவர்களிடம் விசாரிக்கும் போது அன்புவிடம் நாங்க திருடலன்னு சொல்லி மேடி தப்பிக்கப் பார்த்தான். ஆனால் இவங்கள இப்படி எல்லாம் கேட்டா சொல்ல மாட்டாங்கன்னு மகேஷ் அவர்களை உதைக்கப் போனான்.
உடனே அவர்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டார்கள். அடுத்து கோகிலாவின் மாப்பிள்ளை இதற்கு தான் கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்னு சொல்லிருக்காங்க. இனியும் இப்படி யாரையும் சந்தேகப்படாதீங்க. நெருக்கடி வரும்போதுதான் பொறுமையைக் கடைபிடிக்கணும்னு அவனது அண்ணனிடம் அறிவுரை சொல்கிறான்.
அந்த நேரத்தில் 'இங்க நாங்க வந்ததே தப்பு. ஆனந்திக்காகத் தான் வந்தோம். எங்களுக்கு நாங்க பட்ட களங்கம் போதும். இனியும் இங்கு இருக்க விரும்பல. நாங்க கிளம்புறோம்'னு வாணியும், வேலுவும் அங்கிருந்து கிளம்புகின்றனர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அந்த சமயம் வாசலில் வந்து அழகப்பன் அவர்கள் எதிரே நிற்கிறார்.
'என் புள்ளை எந்த சங்கடமான சூழ்நிலையிலும் திருட மாட்டான்னு எனக்குத் தெரியும். நான் கோபத்துல தான் உங்களை சில சமயம் பேசுவேன். ஆனால் நீங்க இந்த கல்யாண வீட்டுல எங்க மானத்தைக் காப்பாத்திட்டீங்க. என் புள்ளை இந்த இடத்துல உசந்து நிக்கிறான். நீயும், என் மருமகளும் இந்தக் கல்யாணத்துல நின்னு நடத்தாம போனா அது கோகிலா, ஆனந்தி, நாங்கன்னு எல்லாரையும் கைவிட்டுப் போன மாதிரி ஆகிடும்.
அதனால் இங்க இருக்குற அனைவரின் சார்பாகவும் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன். நீங்க கிளம்பாதீங்க. கல்யாணத்தை நடத்திக் கொடுங்க'ன்னு மனம் உருக கையெடுத்துக் கும்பிடுகிறார் அழகப்பன். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை அன்பு, ஆனந்தி, மகேஷ் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பார்க்கின்றனர். இனி நடப்பது என்ன என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.