டைஹார்ட் ரஜினி ஃபேன் இப்படி செய்யலாமா!.. கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில் அந்த இயக்குனர்?!..
Karthik subbaraj: குறும்படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பாராஜ் பீட்சா படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் இயக்குனராக மாறினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் ஹிட் அடித்தது. அதன்பின் சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோரை வைத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படமும் பேசப்பட்டது.
ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்பாராஜ். நண்பர்கள் வட்டாரத்திலும் ஊடகங்களில் பேட்டி கொடுக்கும்போதும் அவரை ‘தலைவர்’ என்றே குறிப்பிடுவார். அதோடு, ஜிகர்தண்டா படத்தை ரஜினிக்கு திரையிட்டும் காட்டினார் படத்தை பார்த்து ரஜினியே பாராட்டினார். அவ்வப்போது ரஜினிக்கு கதை சொல்லியும் வந்தார். அதில் ஒன்று கிளிக் ஆகியே பேட்ட படம் உருவானது. இந்த சூப்பர் டூப்பர் ஹிட் இல்லை என்றாலும் வெற்றி பெற்றது.
அதன்பின்னரும் ரஜினியை வைத்து படமெடுக்க கார்த்திக் சுப்பாராஜ் முயன்றார். சில முறை அவரை சந்தித்து கதை சொன்னார். ஆனால், எதுவும் டேக் ஆப் ஆகவில்லை. விஜயிடம் கூட சில கதைகள் சொன்னார். ஆனால், விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவே அதுவும் நடக்கவில்லை. சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் சூர்யாவுக்கு லாபம் கொடுக்கும் படமாக அமைந்தது.
கார்த்திக் சுப்பாராஜ் ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் என்கிற பெயரில் படங்களை தயாரித்தும் வருகிறார். ஏற்கனவே பல படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிலையில், இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜின் படங்களில் வேலை செய்தவரும், மேயாத மான், ஆடை, குளு குளு போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் ரெட்ரொ படத்தில் வில்லனாக நடித்த விது ஹீரோவாக நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. ரத்னகுமார் லியோ, கருப்பு, கராத்தே பாபு, சர்தார் 2 போன்ற படங்களில் இணை இயக்குனராக வேலை செய்திருக்கிறார். ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா - கழுகு கதை சொன்னார். அவர் விஜயைத்தான் காக்கா என சொல்கிறார் என புரிந்துகொண்டு விஜய் ரசிகர்கள் ரஜினியை திட்ட துவங்கினர். அதன்பின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது மேடையில் பேசிய ரத்னகுமார் விஜயையும், விஜய் ரசிகர்களையும் குஷிப்படுத்த ‘கழுகு எவ்வளவு பறந்தாலும் கீழே வந்துதான் ஆகவேண்டும்’ என பேசினார்.
இது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பாராஜ் எப்படி ரஜினிக்கு எதிராக பேசியவரை வைத்து படம் எடுக்கிறார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. உண்மையில் ரத்னகுமாரும் கார்த்திக் சுப்பராஜும் நண்பர்கள். ரத்னகுமார் முதலில் இயக்கிய மேயாத மான் படத்தையும் கார்த்திக் சுப்பாராஜே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.