தலைவன் தலைவி பாடல்கள் வெளியிடும் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளியாக உள்ள படம் தலைவன் தலைவி. பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மகாராஜா படத்தை தவிர்த்து அனைத்தும் தோல்வி படங்களாக கொடுத்த் வரும் விஜய் சேதுபதிக்கு இப்படம் நிச்சயம் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அதே வேலை எதற்கும் துணிந்தவன் தோல்வியிலிருந்து மீள பாண்டியராஜும் இப்படத்தின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த மாதம் வெளியான டீசரில் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் கணவன் மனைவியாக சண்டைப் போடும் காட்சி பார்ப்பதற்கு ரசிக்கும் விதமாக இருந்தது. நகைச்சுவை நிறைந்த குடும்பப்படமாக இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.அதே வேலை சமீபத்தில் வெளியான இப்படத்தின் லிரிக்கல் வீடியோவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தலைவன் தலைவி படத்தின் பாடல்கள் வெளியிடும் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஜூலை 12ம் தேதி ஆடியோ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.