தனுஷுக்கு மட்டும் சிங்கிள்!. சிம்புவுக்கு 2 கெட்டப்!.. வெற்றிமாறன் செய்வது சரியா?!..
Vetrimaran simbu: தனுஷும், வெற்றிமாறனும் பொல்லாதவன் படம் மூலம் ஒன்று சேர்ந்தனர். பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மேக்கிங்கை கோலிவுட் இயக்குனர்களே பாராட்டி இருந்தனர். அதன்பின் மீண்டும் தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய படம்தான் ஆடுகளம். இந்த படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
அதன்பின் தனுஷை வைத்து வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கினார் வெற்றிமாறன். இதில் அசுரன் படத்திற்கு தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்தது. எனவே, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக வெற்றிமாறன் பார்க்கப்பட்டார். அதோடு அவரின் இயக்கத்தில் நடிக்க சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால், அவரோ சூரியை வைத்து விடுதலை படத்தை எடுக்கப்போனார். அது வெற்றியடையவே விடுதலை 2 எடுத்தார். அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது தொடர்பான பணிகள் முடிவடையவில்லை. எனவே, சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறேன் என அறிவித்தார் வெற்றிமாறன்.
எனவே, அது வட சென்னை 2 என செய்திகள் பரவியது. இதற்கிடையில் குபேரா புரமோஷன் நிகழ்ச்சியில் வட சென்னை 2 அடுத்த வருடம் துவங்கும் என தனுஷ் கூறினார். எனவே, ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. ஒருபக்கம், சிம்பு படத்திற்கான புரமோ ஷூட் வீடியோவை இயக்கினார் வெற்றிமாறன். சிம்பு நடிப்பது வட சென்னை தொடர்பான கதை, அதற்கு என்.ஓ.சி கொடுக்க தனுஷ் தரப்பில் 20 கோடி கேட்கப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியானது.
ஆனால், தனுஷ் பணம் கேட்கவில்லை என வெற்றிமாறன் விளக்கமளித்தார். மேலும், வட சென்னை 2வில் தனுஷ்தான் நடிப்பார் எனவும், சிம்பு நடிப்பது தனிக்கதை எனவும் சொன்னார். இந்த படத்தில் சிம்பு இளமையான மற்றும் வயதானவர் என இரண்டு கெட்டப்புகளில் வருகிறாராம். சமீபத்தில் எடுக்கப்பட்டது சிம்பு இளமையான தோற்றத்தில் இருந்தது. வயதான கெட்டப்புக்கான ஷூட் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோ அடுத்த வாரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
வட சென்னையில் தனுஷுக்கு சிங்கிள் வேடம் கொடுத்த வெற்றிமாறன் இந்த படத்தில் சிம்புவுக்கு 2 கெட்டப் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.