விஜயகாந்துக்கு அப்புறம் அவர்தான்!.. வாய்ப்பே இல்ல!.. நடிகரை புகழ்ந்த வடிவுக்கரசி!..
Vijayakanth: தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக இருப்பவர் வடிவுக்கரசி. 80களில் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். ராஜேஷ் அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் கே.பாக்கியராஜ் வடிவுக்கரசியை அடைய முயற்சி செய்வது போல கதை அமைக்கப்பட்டிருந்தது.
அதன்பின் பல படங்களிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் அக்கா, அண்ணி போன்ற குணர்ச்சித்திர வேடங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வில்லி நடிகையாவும் மாறினார் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடித்த முதல் மரியாதை படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
நடிகர் விஜயகாந்தின் பல படங்களில் வடிவுக்கரசி நடித்திருக்கிறார். கன்னிப்பருவத்திலே படத்திலேயே ராஜேஷ் நடிக்கவிருந்த வேடத்தில் விஜயகாந்த் நடிக்கவிருந்தார். தயாரிப்பாளரிடம் விஜயகாந்தை கூட்டிக்கொண்டு போய் வாய்ப்பு வாங்கி கேட்டார் பாக்கியராஜ். ஆனால், ராஜேஷை இயக்குனர் முடிவு செய்ததால் அந்த வாய்ப்பு விஜயகாந்துக்கு கிடைக்கவில்லை.
திரையுலகில் நடிகைகள் தயாரிப்பாளராக மாறும்போது அவர்கள் முதலில் செல்வது விஜயகாந்திடம்தான். ஏனெனில் அவர்தான் யார் கேட்டாலும் கால்ஷீட் கொடுப்பார். அப்படி வடிவுக்கரசி தயாரிப்பாளரான போது விஜயகாந்த் நடித்த கொடுத்த படம்தான் அன்னை என் தெய்வம். எனவே, விஜயகாந்திடம் வடிவுக்கரசிக்கு நல்ல நட்பு இருந்தது.
இந்நிலையில், நடிகர் கார்த்தியை விஜயகாந்துடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் வடிவுக்கரசி. ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘கார்த்தி தம்பியுடன் நடிக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எல்லோரையும் அரவணைத்து போவார். படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களோடு மட்டுமில்லை. அந்த ஊர் மக்களிடமும் நன்றாக பழகுவார். இந்த குணத்தை நான் விஜயகாந்திடம் பார்த்திருக்கிறேன். அவருக்குபின் இந்த குணம் தம்பி கார்த்தியிடம் இருப்பதை பார்த்தேன்.
ஒரு ஷூட்டிங்கிறாக தேனிக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு ஒரு பள்ளிக்கூடம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. கார்த்தி அதை பார்த்துவிட்டு தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்தார். அதைப்பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன்’ என பேசியிருக்கிறார் வடிவுக்கரசி.