விஜய் அஜித் ஓரமா போங்க!.. வேறலெவலில் வரப்போறார் கூலி!.. தலைவரு நிரந்தரம்!...
Coolie: சமீபகாலமாகவே ரஜினியை விஜய் ஓவர் டேக் செய்துவிட்டார்.. ரஜினியின் படங்களை விட விஜய் படங்கள் அதிக வசூலை பெறுகிறது. ரஜினியின் சம்பளத்தை விட விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றெல்லாம் பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. அதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளது. ஆனால், நானே எப்போதும் சூப்பர்ஸ்டார் என ரஜினி நிரூபித்துக்கொண்டேதான் வருகிறார். அவரின் ஜெயிலர் படம் 650 கோடி வசூல் செய்தது.
இதுவரை எந்த விஜய் படமும் அவ்வளவு வசூல் செய்தது இல்லை. இத்தனைக்கும் ரஜினியை விட 50 கோடி அதிகமாகவே சம்பளம் வாங்குகிறார் விஜய். கூலி படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் 150 கோடி. ஆனால், கோட் படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் 200 கோடி. ஜனநாயகன் படத்திற்கு விஜய் 225 (சம்பளம் 200 கோடி.. ஜிஎஸ்டி 25 கோடி) வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் கூலி. லோகேஷுடன் ரஜினி கூட்டணி போட்டியிருப்பதால் இப்படத்திற்கு அதிக ஹைப் இருக்கிறது. ஏனெனில், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
அதனால் அந்த மொழிகளிலிருந்து நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா போன்ற முக்கிய நடிகர்களை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். பாலிவுட்டிலிருந்து அமீர்கானையும் கொண்டு வந்திருக்கிறார்கள். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் வியாபாரம் 500 கோடியை தொட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இதில் முக்கிய பங்கு வகிப்பது ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் உரிமைதான். பல வினியோகஸ்தர்கள் மோதியதில் ஹம்ஷினி எண்டெர்டெயின்மெண்ட் சுமார் 86 கோடி கொடுத்து ஓவர்சீஸ் உரிமையை வாங்கியுள்ளனர். அதோடு, 5 கோடி வியாபார செலவும் சேர்த்தால் 91 கோடி வருகிறது.
எனவே, அதற்கு மேல் லாபம் வரவேண்டும் என்பதற்காக கூலி படத்தை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். இதுவரை எந்த தமிழ் பட நடிகரின் படமும் இவ்வளவு வெளிநாடுகளில் ரிலீஸானது இல்லை. எனவே, கூலி படம் மூலம் இந்த பெருமை ரஜினிக்கு வந்திருக்கிறது. ஒருபக்கம் கூலி படத்தின் வியாபாரத்தை பார்த்துவிட்டு ஜெயிலர் 2-வில் நடிக்க ரஜினி 250 கோடி சம்பளம் கேட்பதாக செய்திகள் கசிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.