எல்லாமே ஃபிளாப்புன்னாலும் விட மாட்டேன்!.. அடுத்த படத்தை துவங்கிய ஐஸ்வர்யா ரஜினி!...

By :  MURUGAN
Published On 2025-07-04 21:36 IST   |   Updated On 2025-07-04 21:36:00 IST

Aishwarya rajinikanth: நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தனுஷை திருமனம் செய்து கொண்டபின் செல்வராகவனிடம் 2 படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். அதன்பின் தனுஷை வைத்து 3 எனும் படத்தை துவங்கினார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தாலும் படம் பெரிதாக ஓடவில்லை.

அதன்பின் சில வருடங்கள் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா சில வருடங்கள் கழித்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரியா ஆனந்த், விவேக், சதீஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆனால், படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. அதன்பின் சினிமா வீரன் என்கிற ஒரு ஆல்பத்தையும் இயக்கினார்.

அதுவும் பேசப்படவில்லை. அதன்பின்னர் லால் சலாம் என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாவின் அப்பா ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். லைக்கா தயாரிப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என பெரிய செலவில் இப்படம் உருவானது.

ஆனால், படத்தின் ஷூட்டிங் முடிந்தபின் ரிலீஸ் தேதி 2 முறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. படத்தின் முக்கிய காட்சிகள் கொண்ட ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என சொன்னார் ஐஸ்வர்யா. ஒருகட்டத்தில் அந்த காட்சிகள் இல்லாமலேயே படத்தை ரிலீஸ் செய்தார்கள். ரஜினி நடித்திருந்தும் லால் சலாம் படம் ஓடவில்லை.


அதன்பின் ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டது என சொல்லி அந்த காட்சிகளை சேர்த்து ஓடிடியில் வெளியிட்டார்கள். ஆனால், ஓடிடியிலும் இப்படம் பேசப்படவில்லை. தற்போது தனது புதிய படத்தை துவங்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க 18 வயதிலிருந்து 25 வயது வரை உள்ள ஒரு ஆணும், பெண்ணும் தேவைப்படுகிறது என விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அறிவிப்பை பார்க்கும்போது இந்த படத்தை புதுமுகங்களை வைத்து ஐஸ்வர்யா இயக்கு திட்டமிட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

Tags:    

Similar News