நாயகன் படத்துக்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அட அவரே சொல்லிட்டாரே!
1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சரண்யா, ஜனகராஜ், நாசர், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்த படம் நாயகன். இளையராஜாவின் இசையில் படம் மிக நேர்த்தியாக இருந்தது. பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
நான் சிரித்தால் தீபாவளி, நீ ஒரு காதல் சங்கீதம், அந்தி மழை மேகம், நிலா அது வானத்து, தென்பாண்டிச் சீமையிலே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த நேரத்தில் படம் தமிழ் மட்டும் அல்லாமல் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன்.
மும்பை தாதாவான வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். சிறுவன் முதல் வயதானவர் வரையிலான கெட்டப்பில் கமல் படத்தின் கேரக்டர் வேலுநாயக்கராகவே தத்ரூபமாக வாழ்ந்து காட்டியிருப்பார். படத்தின் காட்சி அமைப்புகள் கொஞ்சம் கூட சலிக்காது.
கதையோடு பொருந்திய பாடல்கள். கூர்மையான வசனங்கள் என படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
கமல் பீக்கில் இருந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் கமலுக்கு நாயகன் படத்தில் நடிக்க சம்பளம் எவ்வளவு கொடுத்தார்கள் என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்.தமிழ்சினிமாவில் ஒரு முக்கியமான தயாரிப்பாளர், இயக்குனர் முக்தா சீனிவாசன். இவர் தயாரிக்கவும் செய்துள்ளார். இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது தயாரிப்பில் வெளியான முக்கியமான படம் நாயகன். இந்தப் படத்துக்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு என இவரது மூத்த மகன் முக்தா ரவி சொல்கிறார். வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.
நாயகன் படம் பெரிய லாபத்தைக் கொடுக்கல. நஷ்டத்தைக் கொடுத்தது. ஆனா விநியோகஸ்தர்களுக்கு லாபம். நார்த் ஆற்காடு, சௌத் ஆர்காடு விநியோகஸ்தர்கள் எல்லாம் பேர் சொல்லும் பிள்ளை என்ன ரேட் போயிருக்கோ அதுல 10 பர்சன்டோ, 5 பர்சன்டோ பார்த்துக் கொடுத்துட்டாங்க. கமலுக்கு மார்க்கெட் இருக்கும்போது 20 லட்சம் சம்பளமா கொடுத்தாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.