விஜய்க்கு சரியான ரிசல்ட் எப்போ கிடைக்கும் தெரியுமா? பிரபலம் அருமையா கணிச்சிட்டாரே!

By :  SANKARAN
Published On 2025-07-04 17:16 IST   |   Updated On 2025-07-04 17:16:00 IST

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த விஜய் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தனது கடைசி படமான ஜனநாயகனில் இப்போதுதான் நடித்து முடித்துள்ளார். படத்தில் அவருடைய ஃபோர்ஷனுக்காக படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இன்னும் டப்பிங், எடிட்டிங், ரீ ரெக்கார்டிங் மற்றும் டெக்னிக்கல் பணிகள், புரொமோஷன்னு நிறைய இருக்கு. படம் வரும் பொங்கல் 2026ல் வெளியாகிறது. அதே ஆண்டில் தான் சட்டமன்றத் தேர்தல். அரசியல் வருகைக்கு அச்சாரம் இடும் வகையில் படம் இருக்கும்னு பலரும் சொல்றாங்க. அது இருக்கட்டும். விஜய் அரசியலுக்கு வந்துள்ளது சரியான பாதையா என கேட்டதற்கு பிரபலம் ஒருவர் என்ன பதில் சொல்லி இருக்கிறார்னு பாருங்க.

விஜய் இப்போ கடைசியா ஜனநாயகன் படத்துல நடிச்சிக்கிட்டு இருக்காரு. இதுதான் அவரோட கடைசி படம். இதுக்கு அப்புறம் முழுநேர அரசியல்ல இறங்கப் போறேன்னு சொல்றாரு. இதுபற்றி உங்க கருத்து என்னன்னு ஆங்கர் கேட்க அதற்கு பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் இப்படி பதில் சொல்கிறார்.

விஜயின் கடைசி படம் ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துக்கள். அவரு சினிமாவை விட்டு ஒதுங்குறாரு. அது அவரது விருப்பம். கட்சி ஆரம்பிச்சிட்டாரு. 250 கோடியை விட்டுட்டுத் தான் அரசியலுக்கு வர்றாரு. அரசியலை சரியா பண்ணனும்.

இன்னும் வரைக்கும் சரியா பண்ணல. இன்னும் முழுமையா இறங்கல. எடுத்த உடனே நான் முதல் அமைச்சர் ஆகுறேன் என்கிற எண்ணத்தோடு வர்றதைத் தவிர்த்து ஒரு எலெக்ஷன் தனியா நிற்கணும். அப்படி நின்னு நமக்கு என்ன செல்வாக்கு மக்கள்கிட்ட இருக்குன்னு அவரு கணிச்சிட்ட பிறகு அப்புறம் எந்தக் கூட்டணிக்குப் போகலாம்? யாரோட சேர்ந்தா ஜெயிக்கலாம்? எப்போ முதல் அமைச்சர் ஆகலாம் என்பதெல்லாம் அவர் மக்களோடு இணைந்து பாடுபடணும்.


அப்போதுதான் அதுக்கு சரியான ரிசல்ட் கிடைக்கும். இதுக்கு இடையில யாராலயும் கணிக்க முடியாது. இப்போ 12 பர்சன்ட் ஓட்டு இருக்குன்னு சொல்றாங்க. ரசிகர்கள் இருக்காங்க. அவங்க அரசியல் பயிற்சி எடுக்கணும். ரசிகர்கள் வேற. அரசியல் வேற. இவரே இன்னும் பயிற்சி எடுக்கணும். முழுமையா வரல. எழுதிக் கொடுக்குற அறிக்கையைத் தான் படிக்கிறாரு.

2026ல திமுக நிச்சயம் ஆட்சிக்கு வரும். வேலைகளை அற்புதமா பண்ணிக்கிட்டு இருக்காங்க. தொண்டர்கள் எலெக்ஷன் ஒர்க் அப்படி பண்றாங்க. அந்த மாதிரி இவரு தொண்டர்கள் நல்லா பண்ணனும். நம்ம தமிழன் கட்சியை ஆரம்பிச்சிட்டாரு. வரட்டும். ஆனா அவசரப்பட வேண்டாம். பொறுமையா வரட்டும் என்கிறார் தயாரிப்பாளர் கே.ராஜன். 

Tags:    

Similar News