மீண்டும் மீண்டும் தப்பு செய்யும் தனுஷ்!... கேப்டன் மில்லர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா?

by Akhilan |
மீண்டும் மீண்டும் தப்பு செய்யும் தனுஷ்!... கேப்டன் மில்லர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா?
X

Captain Miller: தனுஷ் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் எனக் கூறப்பட்டாலும் வசூல் பல்லை காட்டி இருக்கும் நிலை தான் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து, வலைப்பேச்சு பிஸ்மி கொடுத்திருக்கும் ரிப்போர்ட்டில் இருந்து, கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தது. இப்படத்தின் தயாரிப்பு செலவு 95 கோடி ரூபாய், பப்ளிசிட்டி செலவு 3 கோடி ரூபாய், விநியோக செலவு 2 கோடி ரூபாய் ஆனது. 2 வருடத்துக்கு முன்னரே தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டதால் அப்போதே அவருக்கு 10 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: கட்சியின் பெயரை மாற்றப் போகும் தளபதி விஜய்… ரஜினியே ஆதரவாம்!.. இவர் சொல்வதை கேளுங்க!..

இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 22 கோடிக்கும், கேரளா உரிமை 2 கோடிக்கும், கர்நாடகா உரிமை 3.5 கோடிக்கும், தெலங்கானா உரிமை 2.10 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 9 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை 11 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை 50 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 17 கோடிக்கும், ஆடியோ உரிமை 3 கோடிக்கும் என மொத்தமாக 119.30 கோடி பிசினஸ் செய்தது.

மொத்த பட்ஜெட்டான 130 கோடியில் இருந்து 119.60 கோடிக்கு தான் இந்த படம் வியாபாரம் ஆகி இருக்கிறது. அப்படி என்றால் இப்படம் தயாரிப்பாளருக்கு 10.40 கோடி ரூபாய் நஷ்டம் தான். இவருக்கு இப்படியென்றால் விநியோகிஸ்தர்கள் நிலையும் அப்படி தான் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கேப்டன் மில்லர் 436 திரையரங்குகளில் ரிலீஸானது.

இதையும் படிங்க: இளையராஜா மேஸ்ட்ரோ கிடையாது!. ஏ.ஆர்.ரகுமான்தான் ஆஸ்கார் நாயகன்… பயில்வான் பொளேர்

கோலிவுட்டில் நன்றாக நடிக்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இருக்கும் தனுஷ் தன் ரசிகர்கள் விரும்பும் படங்களை தேர்வு செய்து நடித்தாலே அவரின் கேரியருக்கு சரியாக அமையும். கேப்டன் மில்லர் போன்று அதீத வன்முறை எல்லா நேரத்திலும் வொர்க் அவுட் ஆகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொல் பேச்சு கேட்ட சிவகார்த்திகேயன்!… தன் புரோமோஷனுக்காக அவரை பயன்படுத்தி கொண்ட அஜித்… பொறாமையின் உச்சம்

Next Story