Bigg boss Tamil: சிவகார்த்திகேயன் படத்தில் பிக்பாஸ் பிரபலம்... யாருன்னு தெரியுதா?
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சிவகார்த்திகேயன்... என்ன பண்ணினார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வர உள்ள படம் அமரன். இந்தப் படத்தைத் தயாரித்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இது ஒரு உண்மைக்கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. சாய்பல்லவி மேஜரின் மனைவியாக இந்து ரெபேக்கா வர்க்கீஸ் என்ற துணிச்சலான கேரக்டரில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்ஷன் படங்களில் பலவற்றில் நடித்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய அந்தஸ்தை உண்டாக்கி விடும். அந்த வகையில் அமரன் படம் அவருக்கு பெரிய திருப்புமுனையை உண்டாக்கும் என்றே சொல்லலாம்.
அதன்பிறகு அவர் நடிக்க உள்ள படம் எஸ்கே.23. இதை அதிரடி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்கிறார். அதை சிவகார்த்திகேயன் இவ்வாறு சொல்கிறார்.
சாச்சனா முருகதாஸ் சார் டைரக்ஷன்ல நடிக்கிற படத்துல என் கூட நடிச்சி இருக்காங்க. அவங்க அதுல ஸ்கூல் டிரஸ் தான் போட்டு இருப்பாங்க.
நான் அப்போ 'எந்த ஸ்கூல்மா படிக்கிற, எந்த கிளாஸ்னு' எல்லாம் கேட்டேன். அதுக்கு அவங்க நான் காலேஜ் முடிச்சி வேலைக்கு போயிட்டு இருக்கேன்னு சொன்னதும் அப்படியே ஷாக் ஆகிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 8 தொடரை விஜய்சேதுபதி நடத்தி வருகிறார். டாஸ்க்குகள் வீட்டுக்குள் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. பல்வேறு சர்ச்சைகளும் தினமும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போது பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
தீபாவளிக்கு அமரன் படம் வர உள்ளதால் அந்தப் பட புரொமோஷனுக்காக டிரைலரைப் போட்டுக் காட்டியுள்ளாராம். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த வீடியோ வைரலாகியது. போட்டியாளர்களும் அமரன் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.